கேரளத்தில் பெருகிவரும் போலி பங்கு முதலீட்டு மோசடிகள்: காவல்துறை எச்சரிக்கை!
கேரளத்தில் பெருகிவரும் போலி பங்கு முதலீட்டு மோசடிகள் குறித்து மக்களை காவல்துறை எச்சரித்துள்ளது குறித்து...
கேரளத்தில் பெருகிவரும் போலி பங்கு முதலீட்டு மோசடிகள் குறித்து மக்களை காவல்துறை செவ்வாய்க்கிழமை (செப். 22) எச்சரித்துள்ளது.
சமூக ஊடகங்களில் முன்னணி வர்த்தக நிறுவனங்களின் பெயரில் பங்கு முதலீட்டு வாய்ப்புகளை பொய்யாக வழங்கி, பல மோசடி கும்பல் மக்களை ஏமாற்றுவதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை எச்சரித்துள்ளனர்.
இதுதொடர்பாக கேரள சைபர் பிரிவு காவல்துறை தெரிவித்திருப்பதாவது:
Advertisement
Advertisement
முக்கியப் பங்குச் சந்தை ஆளுமைகள் மற்றும் பிரபலமான நிறுவனங்களின் தலைவர்களைக் கொண்டு ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட விடியோக்களை மோசடிக்காரர்கள் உருவாக்குகின்றனர். இதன்மூலம், அதிக வருமானம் கிடைக்கும் என்று உறுதியளித்து ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் விளம்பரங்களைப் பரப்பி வருகின்றனர்.
இதுபோன்ற விளம்பரங்களை கிளிக் செய்பவர்களிடம், பங்கு வர்த்தகப் பயிற்சி அளிப்பதாகக் கூறி வாட்ஸ்ஆப் அல்லது டெலிகிராம் குழுக்களில் சேர்க்கப்படுகிறார்கள்.
பின்னர் மோசடிக்காரர்கள், முன்னணி வர்த்தக நிறுவனங்களின் செயலிகளைப் போலவே வடிவமைக்கப்பட்ட போலி செயலிகளுக்கான இணைப்புகளை அனுப்பி, அவற்றை பதிவிறக்கம் செய்யும்படி மக்களை வற்புறுத்துகின்றனர்.
இதுபோன்ற போலி செயலிகள் மூலம் கணக்கு தொடங்கும் முதலீட்டாளர்கள், படிப்படியாகத் தவணை முறையில் பணம் செலுத்தத் தூண்டப்படுகிறார்கள். அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக, மோசடிக்காரர்கள் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சிறிய தொகையை எடுக்க அனுமதிக்கின்றனர்.
அதன்பிறகு, பல்வேறு காரணங்களைக் கூறி அந்தத் தளம் மூலம் வாங்கப்பட்ட பங்குகளை விற்பனை செய்ய விடாமல் மோசடிக்காரர்கள் தடுக்கின்றனர். இதைத் தொடர்ந்து, வரிகள் மற்றும் இதர கட்டணங்கள் என்ற பெயரில் கூடுதல் தொகையைச் செலுத்தும்படி பாதிக்கப்பட்டவர்களை மோசடிக்காரர்கள் கேட்கின்றனர்.
இறுதியில் இந்தத் தொகைகளைச் செலுத்திய பிறகும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் பணம் திரும்பக் கிடைக்காததால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்கிறார்கள்.
எனவே, மக்கள் இதுபோன்ற மோசடி விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்றும், மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
The police warned the public on Tuesday (Sept. 22) about the rising number of fraudulent stock investment scams in Kerala.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.