யுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்வி
அமெரிக்க அரசின் அழுத்தத்தால்தான் யுபிஐ பரிவர்த்தனைகள் மீது மத்திய அரசு கட்டணம் விதித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. பிரவீண் சக்ரவர்த்தி கூறியது குறித்து...
அமெரிக்க அரசின் அழுத்தத்தால்தான் யுபிஐ பரிவர்த்தனைகள் மீது மத்திய அரசு கட்டணம் விதித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. பிரவீண் சக்ரவர்த்தி கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களுடன் காங்கிரஸ் எம்.பி. பிரவீண் சக்ரவர்த்தி பேசியதாவது, "நாட்டில் யுபிஐ பரிவர்த்தனை மீதான கட்டணம் முக்கியமான பிரச்னையாக மாறியுள்ளது. ஏனெனில், இதனால் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.
யுபிஐ - பெரும்பாலும் இரு பெரிய நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. கூகுள் பே மற்றும் ஃபோன் பே ஆகிய இரு நிறுவனங்கள்தான் 80 சதவிகித சந்தையைக் கட்டுப்படுத்துகின்றன. இவை இரண்டுமே அமெரிக்க நிறுவனங்களாகும்.
Advertisement
Advertisement
இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகள் இலவசமாக இருப்பதால், வருவாய் கிடைப்பதில்லை என இவ்விரு நிறுவனங்களும் அமெரிக்க அரசிடம் முறையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்திய அரசுக்கு அழுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இரு அமெரிக்க நிறுவனங்கள் பயனடைவதற்காக, இந்தியர்கள் ஏன் ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான கோடிகளைச் செலுத்த வேண்டும்?
இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகள் இலவசம் என்பதை அறிந்தே, இவ்விரு நிறுவனங்களும் இந்திய சந்தைக்குள் நுழைந்தன. சந்தையில் குறிப்பிட்ட பங்கைப் பெற்றவுடன், அவர்களின் கட்டமைப்பை மாற்ற வெளியிலிருந்து அழுத்தத்தை ஏற்படுத்துகின்றனர். இதற்கு எதிராக காங்கிரஸ் குரல் எழுப்பும்" என்று தெரிவித்தார்.
Why should Indians pay thousands of crores every year so that two American companies can benefit? Congress MP Praveen Chakravarty asks
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.