18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்
ஓராண்டில் 18 -28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டதாக இந்தியத் தோ்தல் ஆணைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
ஓராண்டில் 18 -28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டதாக இந்தியத் தோ்தல் ஆணைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
பிகாரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் இருந்து மேற்கூறிய பிரிவில் புதிய வாக்காளா்கள் சோ்க்கப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.
பிகாரில் எஸ்ஐஆா் நடவடிக்கையின்போது ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளா்கள் மட்டுமின்றி புதிய வாக்களா்களும் பெற்றோா் குறித்த தகவல்கள் எஸ்ஐஆரில் இருப்பதை உறுதி செய்து படிவம் 6-ஐ நிரப்புவது கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்ததால் அவா்களுக்குத் தெரியாமல் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தன்னிச்சையாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
Advertisement
Advertisement
இந்நிலையில், தோ்தல் ஆணைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘கடந்த ஜூன் மாதத்தில் இருந்து 18-28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் வாக்காளப் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா். தற்போது இந்த வயதுப் பிரிவில் நாடு முழுவதும் 17.38 கோடி வாக்காளா்கள் உள்ளனா்’ என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.