FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஞானேஷ் குமார் உருவ பொம்மை எரிப்பு! பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் போராட்டம்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் உருவ பொம்மையை எரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியது குறித்து...

25 செப்டம்பர் 2026, 5:33 pm IST
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் - கோப்புப் படம்
பகிர்:

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் உருவ பொம்மையை எரித்து பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் 2 தேர்தல் ஆணையர்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் சட்டவிரோதமாகத் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக வெளியான செய்திகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டுமெனவும், அவர் மீது குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வடகிழக்கு மாநிலமான மேகாலயா, ஜம்மு - காஷ்மீர், புதுச்சேரி, மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் இன்று (செப். 25) போராட்டம் நடத்தியுள்ளனர்.

இத்துடன், மேகாலயா மற்றும் ஜம்முவில் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி பேரணி நடத்திய காங்கிரஸ் கட்சியினர் அவரது உருவ பொம்மையை எரித்து அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து, மேகாலயா காங்கிரஸ் தலைவர் வின்சண்ட் ஹெச் பாலா கூறுகையில்,

“பாஜக மக்களின் தீர்ப்பை சிதைத்து வருகிறது. ஹரியாணா மற்றும் மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்க வேண்டும்; மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

அவர் (ஞானேஷ் குமார்) உடனடியாகப் பதவி விலக வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம். அவர் ராஜிநாமா செய்தவுடன் அவருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள தனி ஆணையம் அமைக்கப்பட வேண்டும். அவர் கைது செய்யப்பட வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம்” எனக் கூறியுள்ளார்.

summary

Congress party members staged protests in various states, burning effigies of Chief Election Commissioner Gyanesh Kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments