தில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்
தில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் காவலர்கள் போல நடித்ததாகக் கூறப்படுவது பற்றி..
தில்லியின் அஸ்தா கஞ்ச் பூங்காவில், தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடிய 17 வயது சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் மூவரும் தங்களை காவல்துறை போல காட்டிக் கொண்டதாக சிறுமி குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகள் தங்களது கையில் துப்பாக்கி மற்றும் கத்தியை வைத்திருந்ததாகவும், அதில் ஒருவர் தன்னுடை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாகவும் சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
தன்னுடைய ஆண் நண்பருடன் பூங்காவில் அமர்ந்திருந்த போது, அங்கு வந்த மூன்று பேர் நண்பரை பிடித்து வைத்துக் கொண்டு காவல்கள் என்று சொல்லி தன்னை மிரட்டினர். எப்படி பூங்காவுக்குள் நுழைந்தீர்கள் என்று கேள்வி கேட்டனர்.
Advertisement
Advertisement
பிறகு, செல்போனை பிடுங்கிக் கொண்டு, உன்னுடைய தாயிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சொன்னார்கள். அதில் ஒருவர், ஆசிஃப் துப்பாக்கியை எடு என்று கூறினார். அப்போது ஆசிஃப் என அழைக்கப்பட்டவர் பாக்கெட்டிலிருந்து துப்பாக்கி எடுத்துக் காட்டி வைத்துவிட்டார்.
பிறகு, தன்னுடைய கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர் என்று கூறியிருக்கிறார். அவர்கள், தீபு, ஹேமு, என்று ஒருவரை ஒருவர் அழைத்துக் கொண்டதாகவும் இங்கு நடந்ததை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று எங்களை மிரட்டிவிட்டுச் சென்றுவிட்டனர் என்றும் கூறியிருக்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.