மணிப்பூரில் 2 பேர் சுட்டுக்கொலை: முதல்வர் கண்டனம்
மணிப்பூரில் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகியிருப்பது பற்றி....
மணிப்பூரில் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 நாகா குடிமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தில் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 நாகா குடிமக்கள் கொல்லப்பட்டதோடு இருவர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகா பெரும்பான்மை மாவட்டமான கலாஜன் கிராமத்தில் பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
Advertisement
Advertisement
முன்னதாக இந்தச் சம்பவம் கங்போக்பி மாவட்டத்தில் உள்ள கலென்ஜங் கிராமத்தில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். பலியானவர்கள் ராக்கி மாவோ, குமார் பௌமாய் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காயமடைந்த 33 வயதான அடானி மானியோ மற்றும் 49 வயதான ஆஷிஹோ சானி ஆகியோர் சிகிச்சைக்காக சேனாபதி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
பலியானவர்களின் உடல்கள் கூராய்வுக்காக சேனாபதி மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு குடிமக்கள் கொல்லப்பட்டதற்கு முதல்வர் ஓய். கெம்சந்த் சிங் கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.
மேலும் இதனை கோழைத்தனமான வன்முறைச் செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Suspected militants shot dead two Naga civilians and injured two others in Manipur's Senapati district on Saturday, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.