வயநாடு: லாட்டரி டிக்கெட்டுக்கு பரிசு கிடைக்காத ஆத்திரத்தில் விற்பனையாளரைக் கத்தியால் குத்திய நபர்!
வயநாட்டில் லாட்டரி டிக்கெட்டுக்கு பரிசு கிடைக்காத ஆத்திரத்தில் விற்பனையாளரைக் கத்தியால் குத்திய நபர் பற்றி....
வயநாட்டில் தான் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு பரிசு கிடைக்காத ஆத்திரத்தில் விற்பனையாளரைக் கத்தியால் குத்திய நபரால் பரபரப்பு நிலவியது.
கேரள மாநிலம், வயநாட்டின் நம்பியார்குன்னு பகுதியில் லாட்டரி கடை நடத்தி வருபவர் வினிதா ராஜேஷ். இவரிடம் தமிழ்நாட்டின் பட்டவயலைச் சேர்ந்த சிவகுமார் லாட்டரி டிக்கெட் தொடர்ந்து வாங்கி வந்திருக்கிறார். இந்த நிலையில் தான் வாங்கிய லாட்டரி சீட்டில் பரிசு கிடைக்காத ஆத்திரத்தில் வினிதா ராஜேஷை, சிவகுமார் கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் வினிதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலிருந்தவர்கள் உடனடியாகத் தலையிட்டு சிவகுமாரைத் தடுத்து நிறுத்தியதுடன், வினிதாவை சுல்தான் பத்தேரியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சிவகுமாரைக் கைது செய்தனர்.
Advertisement
Advertisement
போலீஸார் தகவலின்படி, சிவகுமார் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதற்காக அடிக்கடி வயநாட்டிற்கு வந்துள்ளார். ஆனால், அவருக்கு இதுவரை எந்தப் பரிசும் கிடைத்ததில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை, போதையில் லாட்டரி கடைக்கு வந்த சிவகுமார், தான் வாங்கிய எந்த டிக்கெட்டுக்கும் இதுவரை பரிசு கிடைக்கவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
ஆத்திரத்தின் உச்சத்தில், வினிதாவின் கழுத்தில் கத்தியால் குத்தியதுடன் அவரது தலையிலும் காயப்படுத்தினார் என்று தெரிவித்தனர். இப்பகுதி தமிழ்நாடு எல்லைக்கு அருகில் அமைந்துள்ளதால் அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வினிதாவின் கடையில் அடிக்கடி லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கிச் செல்வதாக போலீஸார் கூறினர்.
A man allegedly stabbed a lottery vendor after a ticket he purchased failed to win a prize at Nambiarkunnu here on Sunday, police said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.