இது தெரியுமா? வானில் தெரியும் மேகம் வெண்மை நிறத்தில் இருப்பது ஏன்?
குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...
வானில் தெரியும் மேகம் ஏன் எப்போதும் வெண்மை நிறத்தில் இருக்கிறது?
மேகங்கள் காற்றினாலும் நீரினாலும் ஆனவை. மேகத்தில் குட்டிகுட்டியான நீர்த் திவலைகள் கோடிக்கணக்கில் இருக்கும்.
சூரியனின் வெளிச்சக் கதிர்கள் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. அதாவது ஒளி எப்போதுமே பளிச்சென்று வெண்மையாக இருக்கிறது.
Advertisement
Advertisement
இந்த வெளிச்சக் கதிர்கள் மேகத்திலுள்ள நீர்த் திவலைகளில் பட்டவுடன் அந்த நீர்த் திவலைகள் சூரிய ஒளியைப் பிரதிபலிக்க ஆரம்பித்துவிடுகின்றன.
அவ்வளவு நீர்த் திவலைககளும் வெளிச்சத்தை ஒன்றாகச் சேர்ந்து பிரதிபலிக்கும்போது, அந்த மேகம் நமக்குப் பார்ப்பதற்கு வெண்மை நிறமாகத் தோன்றுகிறது.
Why are the clouds in the sky always white?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.