முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கைக்கு கடத்த இருந்த சந்தன கட்டையுடன் மூவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசை கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு பொருள்கள் கடத்த போவதாக  உச்சிப்புளி தனிப்பிரிவு போலீஸார்க்கு ரகசிய தகவல் கிடைத்ததையொட்டி

Updated On : 20 நவம்பர் 2014, 6:15 pm IST
பகிர்:

உச்சிப்புளி அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்கு பதுக்கி வைத்திருந்த சந்தன கட்டையை போலீஸார் பறிமுதல் செய்து அது சம்பந்தமாக மூவரையும் கைது செய்து  விசாரணை செய்து வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசை கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு பொருள்கள் கடத்த போவதாக  உச்சிப்புளி தனிப்பிரிவு போலீஸார்க்கு ரகசிய தகவல் கிடைத்ததையொட்டி அப்பகுதியில் புதன் கிழமை இரவு தீவிர ரோந்து பணியில் போலீஸார் ஈடுபட்டு வந்தன.அப்போது அப்பகுதியில் சந்தேகத்தின்படி சுற்றிதிரிந்த மூன்று பேரை  போலீஸார் பிடித்து விசாரணை செய்துள்ளன.அவர்கள் விசாரணையில் இலங்கைக்கு கடத்துவதற்காக பேக்கு பையில் 6 சந்தன கட்டையை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. சந்தன கட்டையை பறிமுதல் செய்த போலீஸார் மூவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மேற்கொண்டு விசாரணை நடத்தின.விசாரணையில் பிரப்பன்வலசை பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் முனியசாமி(30),கன்னியாகுமாரி அருகே மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த அனிஸ்ஜெனின்(23),சுபின்(24) ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

மேலும் இவர்கள் இலங்கைக்கு கொண்டு செல்வதற்காக மார்த்தாண்டம் பகுதியிலிருந்து 2 அடி நீளத்தில் 6 சந்தன கட்டையை வாங்கி வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளன.அதன் பின்னர் போலீஸார் மூவரையும் தங்கச்சிமடம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.மேலும் வனத்துறை அதிகாரிகள் இவர்கள் மீது வழக்கு பதிந்து கடத்தல் குறித்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments