முகப்பு
தற்போதைய செய்திகள்

தேசிய வில்வித்தைப் போட்டிகளில் மயிலாடுதுறை மாணவர்களுக்கு பதக்கங்கள்

தேசிய வில்வித்தைப் போட்டிகளில் பங்கேற்ற மயிலாடுதுறை பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்னர்.தேசிய மாணவர்கள் ஒலிம்பிக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டிகள் யூனியன் பிரதேசமான டாமனில் பிப்-5 முதல் 8 வரை

Updated On : 17 பிப்ரவரி 2015, 10:08 am IST
பகிர்:

தேசிய வில்வித்தைப் போட்டிகளில் பங்கேற்ற மயிலாடுதுறை பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலப்  பதக்கங்களைப் பெற்றுள்னர்.

தேசிய மாணவர்கள் ஒலிம்பிக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டிகள் யூனியன் பிரதேசமான டாமனில் பிப்-5 முதல் 8 வரை நடைபெற்றது.

தமிழ்நாடு அணிகள் சார்பில் 9 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

இதில் நாகை மாவட்டம், மயிலாடுதுறை பகுதி பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் வெவ்வேறு வயது பிரிவில், வி.சஞ்சீவி, ஆர்.தாரணி, என். அபிரிடி, பி.ஏ.அர்விந்த், டி.லோகேஸ்வரன், டி.பாலாஜிபாபு, ஆர். கார்த்திகேயன், கே.பிரதீபா, கே.யமுனா, எம்.விஜயகுமார், சி.கதிரேசன், எஸ்.நவீன், மாற்றுத் திறனாளிகளான எஸ்.கலைச்செல்வி, ஜே.ஜேசுநாதன் ஆகியோர் பீல்டு மற்றும் டார்கெட் போட்டி முறை போட்டியில் அதிகப் புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கங்களைப் பெற்றனர்.

அதேபோல், ஹிருபா, எம்.ஒய்.காதர்மீரா, ஏ.மிர்துன்சணன், எஸ்.ரிஷப்போரா, ஜே.பியூலா, ஜே.ரவிச்சந்திரன் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களும், ஆர்.ஓவியா, கே.வெங்கடேஷ் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் பெற்றனர்.

வில்வித்தைப் போட்டியில்,வெற்றிப் பெற்று பதக்கம் வென்ற மாணவ, மாணவிகள்  மற்றும் பயிற்சியாளர் எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோருக்கு நாகை மாவட்ட, மாணவர்கள் ஒலிம்பிக் கழகத்தின் தலைவர் எம்.என்.ரவிச்சந்திரன், துணைத்தலைவர் என்.சிவபாலன், ஆலோசகர்கள் பாஸ்கரன், தியாகராஜன் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments