இலங்கைச் சிறையில் உள்ள 12 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு
இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருடைய காவல் ஜூன் 19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருடைய காவல் ஜூன் 19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேர், இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாக ஜூன் 2-ம் தேதி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை ஜூன் 12-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அனுராதபுரம் நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் 12 பேரும், காவல் நீட்டிப்புக்காக மன்னார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆசிர்வாதம், மீனவர்களுடைய நீதிமன்றக் காவலை ஜூன் 19-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.