FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உதகையில் யானை வழித்தடங்களில் அங்கீகாரமின்றி கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

உதகையில் யானை வழித்தடங்களில் அங்கீகாரமின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

புதுதில்லி: உதகையில் யானை வழித்தடங்களில் அங்கீகாரமின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடத்தில் அங்கீகாரமின்றி கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றக் கோரி யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், யானை வழித்தடத்தில் உள்ள அங்கீகாரமற்ற கட்டடங்களை 48 மணி நேரத்தில் இடித்து அகற்ற உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவுவிட்டுள்ளதுடன், அங்கீகாரமின்றி செயல்பட்டு வரும் உணவகங்கள், காட்டேஜ் உள்ளிட்டவைகளை சீல் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவிலான கட்டடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டு வருவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் பலரும் வீட்டுமனைக் குடியிருப்புக் கட்டடங்களுக்கு அனுமதி பெற்றுகொண்டு காட்டேஜ்களாக பயன்படுத்தி வருவது கள ஆய்வில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

இதனை முறைப்படுத்தும் வகையில் வீட்டுமனைக் குடியிருப்பு அனுமதி பெற்று காட்டேஜ்களாகப் பயன்படுத்தும் உரிமையாளர்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வீட்டுமனை குடியிருப்புக் கட்டடங்களை காட்டேஜ்களாக பயன்படுத்துவதற்கான திருத்திய திட்டத்தை தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளிடம்  சமர்ப்பிக்க வேண்டும். 

சமர்ப்பிக்க தவறும்பட்சத்தில், அனுமதியில்லாத காட்டேஜ்களுக்கு செப்டம்பர் மாதத்தில் சீல் வைத்து சட்டப்பூர்வ  நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments