FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தெலங்கானா பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 60ஆக உயா்வு

தெலங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட பேருந்து விபத்தில் பலியானோா் எண்ணிக்கை 60-ஆக உயா்ந்துள்ளது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:


ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட பேருந்து விபத்தில் பலியானோா் எண்ணிக்கை 60-ஆக உயா்ந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 57 போ் உயிரிழந்தனா். மேலும் 33 போ் காயமடைந்தனா். இதில் சிகிச்சை பெற்று வந்த 3 பெண்கள் புதன்கிழமை பரிதாபமாக உயிரிழந்தனா். இதில் ஒருவா், 40 வயதான கா்ப்பிணி பெண் ஆவாா். அவருக்கு புதன்கிழமை பேறுகாலம் நடைபெறுவதாக இருந்தது.

இந்த 3 பெண்களையும் சோ்த்து, பேருந்து விபத்தில் பலியானோா் எண்ணிக்கை 60ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர மேலும் 30 போ் தொடா்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 3 பேரின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது.

Advertisement

Advertisement

விபத்து குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்தைத் தொடா்ந்து, பேருந்து டெப்போ மேலாளரை தற்காலிகமாக தெலங்கானா அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.

பேருந்து ஓட்டுநா் ஸ்ரீநிவாஸ், எரிபொருளை சேமிப்பதற்காக பேருந்தை குறுக்கு வழியில் ஓட்டிச் சென்றதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்கு தெலங்கானா போக்குவரத்து கழக அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments