எந்த உதவி வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் செய்கிறேன்: சுபஸ்ரீயின் பெற்றோருக்கு விஜய பிரபாகரன் ஆறுதல்
விளம்பரப் பலகை விழுந்ததில் உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை தேமுதிக தலைவர் வியகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நேரில் சந்தித்து ஆறுதல்
விளம்பரப் பலகை விழுந்ததில் உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது குடும்பத்தாரிடம் எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், எந்த நேரத்திலும் செய்வேன் என்று தெரிவித்தார்.
விளம்பரப் பலகை விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் குரோம்பேட்டையில் உள்ள இல்லத்துக்கு விஜய பிரபாகரன் ஞாயிற்றுக்கிழமை சென்றார். அவரது குடும்பத்தினரைச் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். அவர்களிடம் எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், எந்த நேரத்திலும் செய்வேன் என்று தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக பேனர் விழுந்ததால் அது சர்ச்சையானது. ஒரு தனியார் பேனர் விழுந்திருந்தால் அது இந்தளவிற்கு சர்ச்சையாகி இருக்காது என்பது என கருத்து என்றவர், பேனர் விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றினால் சரியாக இருக்கும் என்றார்.
Advertisement
Advertisement
மேலும் பேனர் விவகாரத்தில் நடிகர் விஜய் தெரிவித்திருக்கும் கருத்து அவருடைய சொந்தக் கருத்து என தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.