தமிழ்நாடு பட்ஜெட்! ஜென் ஸீ-க்களுக்கான அறிவிப்புகள் என்னென்ன?
தமிழ்நாடு பட்ஜெட்டில் ஜென் ஸீ-க்களுக்கு அறிவிக்கப்பட்ட முக்கிய அறிவிப்புகள் பற்றி...
தமிழ்நாடு பட்ஜெட்டில் ஜென் ஸீ இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார்.
2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் என். மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோரை மையப்படுத்தி பல்வேறு அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
முக்கிய அறிவிப்புகள்
பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 44,527 கோடியும், உயர் கல்வித் துறைக்கு ரூ. 8,393, இளைஞர் மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 277 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
11 ஆம் வகுப்பு படிக்கும் 5.32 லட்சம் மாணவர்களுக்கு ரூ. 277 கோடியில் வாட்டர் பாட்டிலுடன் கூடிய நவீன சைக்கிள்கள், ஹெல்மெட்டுடன் வழங்கப்படும்.
கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ. 2,000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் வழங்கப்படும்.
பள்ளி நிறைவுத் திட்டத்தின் கீழ் 3,734 அரசுப் பள்ளிகளில் ரூ. 2,132 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த ஆண்டிற்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழி கற்றல் என்ற புதிய தொழிற்பிரிவுக்காக ரூ. 5.10 கோடி ஒதுக்கீடு
ரூ. 90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்படும்.
அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் SSC, RRB, IBPS போட்டித் தேர்வுகளுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகளுக்காக ரூ. 3.38 கோடி ஒதுக்கீடு.
வெற்றி திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் 12 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும் 1 லட்சம் வேலையில்லா இளைஞர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி. அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து முதற்கட்டமாக 20,000 இளைஞர்களுக்கு பணியிடப் பயிற்சி. பட்டதாரிகள் மற்றும் தொழிற்கல்வி தகுதி பெற்றவர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்படும்
2031 ஆம் ஆண்டிற்குள் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்கப்படும்.
மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்க ரூ. 50 கோடி ஒதுக்கீடு.
விளையாட்டில் ஆர்வமும், திறமையும் கொண்ட 8 முதல் 18 வயதிற்கு உட்பட்ட இளம் பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்படும் ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு.
அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டுக் கல்வி உதவித் தொகைத் திட்டத்துக்காக நடப்பாண்டில் 362 மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும். முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.131 கோடி ஒதுக்கீடு.
தமிழ்நாடு மாணவர் தங்கும் விடுதி மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனம் சார்பில் மாநிலம் முழுவதும் மாணவர் தங்கும் வசதிகளை மேம்படுத்திட சிறப்பு நோக்கு நிறுவனம் (Special Purpose Vehicle) அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
மதுரையில் சீர்மிகு சட்டப்பள்ளி தரத்தில் மேம்பட்ட சட்டக் கல்வி வழங்க, 300 மாணவர்களின் சேர்க்கையுடன் தொடங்கப்படும்.
மின்சார வாகனங்கள் & மின்கலன் பராமரிப்பு பயிற்சி திட்டத்தில் 5 ஆண்டுகளில் 12,500 பாரம்பரிய மெக்கானிக்குகள் உட்பட மொத்தம் 22,500 நபர்கள் பயன்பெறுவர். இதற்காக ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு.
பெருந்தலைவர் காமராசர் சிறப்புப் பள்ளிகள் என்ற பெயரில் நவீன உண்டு உறைவிடப் பள்ளிகள் நிறுவப்படும். 9 -12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி, உணவு, சீருடைகள், தங்குமிடம், பாடப்புத்தகங்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.
பொது நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மறுவடிவமைப்பதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
Tamil Nadu Budget! What are the announcements for Gen Z?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.