FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பாதுகாப்புத் துறை சோதனையில் துப்பாக்கி, நவீன வெடிகுண்டு கைப்பற்றல்!

மணிப்பூரில் பாதுகாப்புத் துறையினர் நடத்திய சோதனையில் ரஷிய துப்பாக்கி, நவீன வெடிகுண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதைப் பற்றி..

20 December 2024, 5:43 pm IST
பாதுகாப்பு துறையினரால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்
பகிர்:

மணிப்பூர் மாநிலத்தில் கிழக்கு இம்பால் மற்றும் காங்போக்பி ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புத் துறையினர் நடத்திய சோதனையில் ரஷிய துப்பாக்கிகள், நவீன வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு துறையினர் நேற்று (டிச.19) கிழக்கும் இம்பாலின் நுங்ப்ராம் மற்றும் லைரோக் வைபேய் ஆகிய இடங்களில் நடத்திய சோதனையில் ரஷியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இயந்திரத் துப்பாக்கி, 4 கையெறி குண்டுகள், 2 வாக்கி டாக்கிகள் மற்றும் இன்னும் சில துப்பாக்கிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, காங்போக்பி மாவட்டத்தின் நேபாலி குத்தி பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் மூன்று துப்பாக்கிகள், ஒரு நவீன வெடிகுண்டு ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் இரண்டு இனக்குழுக்களுக்கு இடையே நடைபெற்ற கலவரத்தில் சுமார் 250 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறையினர் அம்மாநிலம் முழுவதும் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments