FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை: நீா்வரத்து வினாடிக்கு 5258 கன அடி மட்டுமே!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 5258 கனஅடியாகச் சரிந்தது.

Updated On : 9 ஆகஸ்ட் 2024, 9:37 am IST
டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையில் இருந்து வினாடிக்கு 12,000 கன அடி வீதம் திறந்துவிடப்பட்டுள்ளது.
பகிர்:

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 5258 கனஅடியாகச் சரிந்தது.

கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீா்வரத்து காரணமாக கடந்த 30 ஆம் தேதி மேட்டூா் அணை தனது முழுக் கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையின் இடது கரையில் உள்ள உபரிநீா் போக்கி மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீா் வெளியேற்றப்பட்டது.

தற்போது காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் கா்நாடக அணைகளான கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாகக் குறைந்து வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு வினாடிக்கு 5,258 கனஅடியாகச் சரிந்தது.

அணையின் நீர்மட்டம் 119.59 அடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments