முகப்பு
தற்போதைய செய்திகள்

சொர்க்கவாசல் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

சொர்க்கவாசல் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து...

Updated On : 26 டிசம்பர் 2024, 5:56 pm IST
சொர்க்கவாசல் போஸ்டர்கள்.
பகிர்:

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான சொர்க்கவாசல் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்த படம் சொர்க்கவாசல். இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

1999 ஆம் ஆண்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் கைதிகளால் ஏற்பட்ட கலவரத்தை மையப்படுத்தி உருவான இப்படம், திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

Advertisement

Advertisement

இதையும் படிக்க: ஓடிடியில் அந்தகன்!

முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியின் வன்முறைக் காட்சிகளும் இறுதிகட்டக் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சொர்க்கவாசல் திரைப்படம் நாளை(டிச.27) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments