கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குண்டர் தடுப்புச் சட்டத்தில் 6 பேர் கைது!

உடுமலையில் சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய 6 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

DIN

உடுமலையில் சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய 6 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

உடுமலை பகுதியைச் சோ்ந்த 13 மற்றும் 17 வயது சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், உடுமலையைச் சோ்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனா்.

மேலும், இந்த வழக்கில் உடுமலையில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு தொடா்புள்ளது தெரியவந்தது. இதையடுத்து, அதன் மேலாளர் சாமுவேலை காவல் துறையினர் அண்மையில் கைது செய்தனர்.

இவா்களில் 6 பேர் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். 3 போ் சிறுவா்கள் என்பதால் கோவையில் உள்ள கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உடுமலையைச் சோ்ந்த ஜெயகாளீஸ்வன் (18), மதன்குமாா்(19), பரணிகுமாா் (21), பிரகாஷ் (24), நந்தகோபால் (19), பவாபாரதி (22) ஆகிய 6 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT