ஓடிடியில் வெளியானது அரண்மனை - 4!
சுந்தர் சி இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான அரண்மனை - 4 திரைப்படம், தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான அரண்மனை - 4 திரைப்படம், தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.
அரண்மனை - 4 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிப்படமானதுடன், ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.
இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா மற்றும் ராஷி கண்ணா உடன், யோகி பாபு, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், கோவை சரளா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
Advertisement
Advertisement
இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்க, கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு எடிட்டிங் பணிகளை ஃபெனி ஆலிவர் மற்றும் சண்டைக்காட்சிகளை ராஜசேகர் செய்துள்ளார்.
இந்த நிலையில், அரண்மனை 4 திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.