FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Updated On : 8 மே 2024, 10:47 am IST
அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கணவன் - மனைவி இருவரும் பலி
பகிர்:

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தேனி மாவட்டம் கம்பம், மந்தையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மனோகரன் மகன் நல்லதம்பி (39). இவரது மனைவி ரம்யா(35) இருவரும் வீரபாண்டி கோயில் திருவிழாவுக்கு சென்று விட்டு புதன்கிழமை காலை மீண்டும் ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது, க. புதுப்பட்டி வழியாக திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது தேனியை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் கம்பத்தை நோக்கி சென்ற ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோவை ஓட்டி வந்த நல்லதம்பி சம்பவ இடத்திலே பலியானார். படுகாயம் அடைந்த அவரது மனைவி ரம்யா தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரும் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.

Advertisement

Advertisement

இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுநர் முருகன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments