மகாவிஷ்ணு (கோப்புப் படம்) Din
தற்போதைய செய்திகள்

சர்ச்சை பேச்சு: மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன்!

மேடைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் குறித்து...

DIN

மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மேடைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் மத்தியில் மேடைப் பேச்சாளர் மகா விஷ்ணு நடத்திய சொற்பொழிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னைக்கு திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர்.

மகாவிஷ்ணு, மாற்றுத்திறனாளிகளை இழிவுப்படுத்தியதாகக் கூறி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக கைதான மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மகாவிஷ்ணு புழல் அறையில் அடைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு மனுத்தாக்கல் செய்தார். அதில், மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை எனவும், புண்படுத்தி இருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும், தனது பேச்சு திரித்து யூடியூப்-ல் வெளியிட்டதாகவும் அம்மனுவில் மகாவிஷ்ணு தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், மகாவிஷ்ணுவின் ஜாமீன் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT