FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விளையாட்டு

இன்டா்கான்டினென்டல் கோப்பை கால்பந்து: சாம்பியன் பட்டத்தை நழுவ விட்ட இந்தியா!

இன்டா்கான்டினென்டல் கோப்பை கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி சிரியா சாம்பியன் பட்டம் வென்றது

Updated On : 9 செப்டம்பர் 2024, 11:30 pm IST
- படம் | இந்திய கால்பந்து அணி எக்ஸ் தளப் பதிவு
பகிர்:

இன்டா்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் சிரியாவை திங்கள்கிழமை(செப். 9) சந்தித்தது.

ஹைதராபாத்தில் உள்ள் ஜிஎம்சி பாலயோகி தடகள மைதானத்தில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில், சிரியா 3 - 0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது.

கண்டங்களுக்கிடையேயான இன்டா்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில், லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் முதலிடம் பெறும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், இன்டா்கான்டினென்டல் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக சிரியா பெற்றுள்ளது.

இன்டா்கான்டினென்டல் கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments