FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

சாலையில் தோன்றிய திடீர் பள்ளத்தில் சிக்கிய முதியவர்! 3வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

ஜப்பானில் சாலையில் தோன்றிய திடீர் பள்ளத்தில் சிக்கிய முதியவர் குறித்து...

Updated On : 30 ஜனவரி 2025, 12:38 pm IST
சாலையில் தோன்றிய திடீர் பள்ளத்திலிருந்து முதியவரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது
பகிர்:

ஜப்பானில் சாலையின் நடுவே தோன்றிய திடீர் பள்ளத்தில் சிக்கிய 74 வயது முதியவரை மீட்கும் பணி 3வது நாளாக இன்று (ஜன.30) தொடர்கிறது.

ஜப்பானின் சைதமா மாகாணத்திலுள்ள யஷியோ நகர் பகுதியில் கடந்த ஜன.28 அன்று சாலையின் நடுவே திடீர் பள்ளம் ஒன்று உருவானது. அப்போது, அந்த சாலையில் வந்துக்கொண்டிருந்த லாரி ஒன்று அந்த பள்ளத்தினுள் கவிழ்ந்தது. இதில், அந்த லாரியை ஓட்டி வந்த 74 வயதுடைய முதியவர் அந்த பள்ளத்தினுள் சிக்கிக் கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த அந்நாட்டு மீட்புப் படையினர் அன்று முதல் முதியவரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாலையின் அடியில் அமைக்கப்பட்டிருக்கும் கழிவு நீர் குழாய் பழுதானதினால் இந்த திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், அந்த லாரியின் பின்பாகத்தை மீட்புப் படையினர் அந்த பள்ளதிலிருந்து வெளியே எடுத்தனர். ஆனால், முதியவர் அமர்ந்திருந்த ஓட்டுநர் பகுதி பள்ளதிலுள்ள மண் மற்றும் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியுள்ளதால் அவரை மீட்பது தொடர்ந்து சிரமாமாகியுள்ளது.

கடந்த ஜன.28 அன்று சுமார் 33 அடி அகலத்தில் 5 மீட்டர் ஆழத்திற்கு உண்டான இந்த பள்ளத்தினுள் கழிவு நீர் குழாய் உடைந்து அந்த தண்ணீர் நிரம்பி இன்று (ஜன.30) மற்றொரு புதிய பள்ளம் தோன்றியுள்ளது. அதன் பின்னர் இரண்டு பள்ளங்களும் ஒன்றிணைந்து சுமார் 20 மீட்டர் அகலத்திற்கு மிகப்பெரிய பள்ளமாக உருவாகியுள்ளது.

இதையும் படிக்க: விமானப் பாதையில் ஹெலிகாப்டர் நீண்ட நேரம் சென்றது ஏன்? டிரம்ப் கேள்வி

இந்த மிகப்பெரிய பள்ளம் உருவாகியுள்ள சாலையின் அடியில் எரிவாயு குழாய்களும் அமைக்கப்பட்டிருப்பதினால், பாதுகாப்பு கருதி அப்பகுதியிலுள்ள 200 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதி மக்களுக்கு தண்ணீரை குறைந்த அளவில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறுதியாக ஜன.28 அன்று மீட்புப் படையினரின் குரலுக்கு பதிலளித்த முதியவரின் நிலைக்குறித்து அதன்பின்னர் எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, ஜப்பானின் சாலைகளின் அடியில் அமைந்துள்ளா கழிவு நீர் குழாய்கள் பாழடைந்து வருவதினால் அந்நாட்டு சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகின்றது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மலேசியா நாட்டில் கோலாலம்பூர் நகரத்தின் சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தினுள் விஜயலட்சுமி கலி எனும் இந்தியப் பெண் ஒருவர் சிக்கிக்கொண்டார். சுமார் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்த அவரை மீட்கும் பணி பாதுகாப்பு காரணங்களினால் பின்னர் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments