முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜம்முவில் பயங்கரவாதிகளைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை!

ஜம்முவில் பயங்கரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையைத் துவங்கியுள்ளனர்...

Updated On : 30 ஜனவரி 2025, 11:26 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையை இன்று (ஜன.30) துவங்கியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் அம்மாநில காவல் துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் இணைந்து இந்த தேடுதல் வேட்டையைத் துவங்கியுள்ளனர்.

இதையும் படிக்க: 4 வங்கதேசப் பெண்கள் கைது! வீட்டு உரிமையாளருக்கு வலைவீச்சு!

Advertisement

Advertisement

அம்மாவட்டத்தின் பதர்வாஹ் பகுதியிலுள்ள தோர்ஹு, பஸ்தி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் இன்று (ஜன.30) காலை 8.30 மணி முதல் இந்த தேடுதல் நடவடிக்கை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, அப்பகுதியின் குடியிருப்பு வாசிகள் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டத்தை அங்கு பார்த்து காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.