3-ஆம் கட்ட தவெக மாவட்ட நிர்வாகிகள் பட்டியல்!
தவெக மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்ட விஜய்.
தமிழக வெற்றிக் கழகத்தில் மூன்றாம் கட்டமாக, 19 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் கடந்த ஜன.24 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்துக்கு 19 கட்சி மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டார்,
மேலும், சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், முதல்கட்டமாக 19 கட்சி மாவட்டங்களுக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தவெக தலைவர் விஜய் முன்னதாக தெரிவித்து இருந்தார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக, 19 கட்சி மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், மூன்றாம் கட்டமாக 19 கட்சி மாவட்டங்களுக்கு, கட்சி விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தில்லிக்கு இரட்டை என்ஜின் அரசு தேவை: பிரதமர் மோடி
இது பற்றி தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”தமிழக வெற்றிக் கழகத்தில் மூன்றாம் கட்டமாக 19 கட்சி மாவட்டங்களுக்கு, கட்சி விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய https://dropbox.com/scl/fo/w3uvc48ljnlniyrqc5x0v/AO_PD9HpX94MhMeZjuNa7JM?rlkey=927a55eupvh0nocq4hi52dmvw&st=75kfq593&dl=0… என்ற லிங்க்கை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
புதிய நிர்வாகிகளுக்குக் கட்சித் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.