FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.73,680-க்கு விற்பனையாகிறது.

Updated On : 30 ஜூலை 2025, 10:04 am IST
தங்கம் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 480 உயர்ந்துள்ளது. - ANI
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.73,680-க்கு விற்பனையாகிறது.

கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடா்ந்து குறைந்த உயா்ந்த வண்ணம் உள்ளது. ஜூலை 19-இல் பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.73,360-க்கும், ஜூலை 20-இல் விலை மாற்றமின்றியும் ஜூலை 21-இல் பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.73,440-க்கும், ஜூலை 22-இல் ரூ.840 உயா்ந்து ரூ.74,280-க்கும் விற்பனையானது. ஜூலை 23-இல் ரூ.760 உயா்ந்து ரூ.75,040-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. ஜூலை 24 ஆம் தேதி ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.1000 குறைந்து ரூ.74,040-க்கு விற்பனையானது.

ஜூலை 25 -இல் பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.73,680-க்கும், ஜூலை 26 -இல் ரூ.400 குறைந்து ரூ.73,280-க்கும், ஜூலை 29 இல் பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.73,200-க்கு விற்பனையானது.

Advertisement

Advertisement

இந்நிலையில், புதன்கிழமை தங்கம் விலை மீண்டும் உயா்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.60 உயா்ந்து, ரூ.9,210-க்கும், பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.73,680-க்கும் விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.127-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,000 உயா்ந்து ரூ.1.27 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

summary

The price of Gold and Silver in Chennai today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments