FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

ரூ.67,000-ஐ நெருங்கும் தங்கம் விலை: மக்கள் அதிர்ச்சி!

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 அதிகரித்து மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் மக்களை அதிர்ச்சி ஆழ்த்தியுள்ளது.

Updated On : 20 மார்ச் 2025, 10:33 am IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இன்று(மார்ச் 20) பவுனுக்கு ரூ.160 அதிகரித்து மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி ரூ.66,400-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

அதனைத் தொடர்ந்து 15 ஆம் தேதி பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.65,760-க்கும், மார்ச் 17 ஆம் தேதி பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.65,680-க்கு விற்பனையானது.

Advertisement

Advertisement

செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ. 66,000-க்கு விற்பனையானது. புதன்கிழமை மீண்டும் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து மக்களிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புதிய உச்சம்

இந்த நிலையில், சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு அதிரடியாக ரூ.160 உயர்ந்து, ரூ. 66,480 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ. 8,310-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து பவுன் ரூ.67 ஆயிரத்தை நெருங்குவது நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 10 பைசா உயர்ந்து ரூ.114.10-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,14,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments