அருணாச்சலப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்
அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் வெள்ளிக்கிழமை(மே 23) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
தவாங்: அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் வெள்ளிக்கிழமை(மே 23) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.10 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் தவாங் பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.