கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி தகுதி நீக்கம்: அதிமுக இன்பதுரை எம்.பி
கட்சித் தாவல் தடைச் சட்ட புகார் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அதை எதிர்கொள்ளும் நபர் அமைச்சராக இருந்தால் சிறப்பு அதிகாரம் மூலம் உச்ச நீதிமன்றம் அவரை பதவி நீக்கம் செய்வது குறித்து...
சென்னை: கட்சித் தாவல் தடைச் சட்ட புகார் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அதை எதிர்கொள்ளும் நபர் அமைச்சராக இருந்தால் சட்டப்பிரிவு 142 வழங்கும் சிறப்பு அதிகாரம் மூலம் உச்ச நீதிமன்றம் அவரை பதவி நீக்கம் செய்யலாம் என அதிமுக வழக்குரைஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
கட்சித் தாவல் தடைச் சட்ட புகாருக்கு ஆளாகிய ஒருவரை தகுதி நீக்கம் செய்ய அரசியலமைப்பு சட்டத்தின் 10 ஆவது அட்டவணை பேரவைத் தலைவருக்கு அதிகாரம் தருகிறது. அவ்வாறு புகாருக்கு உள்ளானவரை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கும் முன் சட்டப்பிரிவு 163 - ன்படி முதல்வரிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் திருப்தி அடைவது அவசியம்.
Advertisement
Advertisement
விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அதை எதிர் கொள்ளும் நபர் அமைச்சராக இருந்தால் சட்டப்பிரிவு 142 வழங்கும் சிறப்பு அதிகாரம் மூலம் உச்ச நீதிமன்றம் அவரை பதவி நீக்கம் செய்யலாம். மணிப்பூர் மாநில அமைச்சர் தவுனோஜம் ஷியாம்குமார் சிங் வழக்கில் 2020 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதற்கு நல்ல உதாரணம். ஆக எல்லா நிலைகளிலும் அரசியலமைப்பு சட்டமே மேலோங்கி நிற்கும். இதுதான் நமது அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பாகும் என தெரிவித்துள்ளார்.
பேரவையில் அதிமுகவினர் தங்களது நிலைப்பாடு குறித்து இருதரப்பினரும் பேரவைத் தலைவரை தனித்தனியாகச் சந்தித்து மனு அளித்தனர். இந்த விவகாரத்தில் பேரவைத் தலைவர் விரைவில் முடிவை அறிவிப்பதாக கூறியுள்ள நிலையில், ஒருவேளை சி.வி.சண்முகம் தரப்பினர் அமைச்சராக பதவியேற்றால் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்று எச்சரிக்கும் பொருட்டு அதிமுக எம்.பி. இன்பதுரை இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை
நடந்து முடிந்த சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீா்மானத்துக்கு ஆதரவாக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்பட 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனா். இதையடுத்து அவா்களில் சிலரை கட்சிப் பதவியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தாா்.
எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை
அதிமுக பல தோல்விகளைக் கண்டுள்ளது. ஆனால், தோல்வியில் இருந்து மீண்டு ஆட்சி அமைப்பது கட்சித் தலைவரின் திறமையைப் பொருத்தது. அது முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு இருந்தது. ஆனால், கூட்டணிக்காக வீடு தேடி வந்தவா்களையே எடப்பாடி பழனிசாமி திருப்பி அனுப்பினாா். அவா் பதவியேற்றதில் இருந்து அதிமுக ஒரு குடும்பத்தின் பிடியில் சென்றுவிட்டது. அவரது உறவினா்கள் கட்சியை ஆக்கிரமித்து விட்டனா்.
செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி பாஜகவுடன் ஒட்டோ, உறவோ இல்லை என்று கூறி வந்த எடப்பாடி, யாரையும் கலந்தாலோசிக்காமல் திடீரென எங்களை உள்துறை அமைச்சா் அமித்ஷா வீட்டுக்கு அழைத்துச் சென்று, பாஜகவுடனான கூட்டணியை தன்னிச்சையாக உறுதி செய்தாா். சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிகவை கூட்டணியில் இணைக்க கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதையும் அவா் உதாசீனப்படுத்திவிட்டாா்.
இப்போது முக்கிய நிா்வாகிகளான 26 பேரை நீக்கியுள்ளாா். இது செல்லாது. எங்களை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை. எங்களிடம் விளக்கம் கேட்கவில்லை. இனி நடைபெறும் கட்சியின் பொதுக்குழுவில் கட்டாயம் நாங்களும் கலந்து கொள்வோம். அதிமுக மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்றால், பிரிந்தவா்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். அவா்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவேண்டும்.
திமுகவின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முயற்சி செய்த எடப்பாடி பழனிசாமி அடிப்படை கொள்கையை மீறியதால், அவா் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றாா்.
Disqualified under the Anti-Defection Law: AIADMK MP Inbathurai...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.