மும்பை: புற்றுநோயாளிகளுக்காக 'ராமாயணா' சிறப்புத் திரையிடல்!
புற்றுநோயாளிகள் மற்றும் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்காக, 'ராமாயணா' திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் பற்றி...
புற்றுநோயாளிகள் மற்றும் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்காக, 'ராமாயணா' திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலுக்கு நடிகர் விவேக் ஓபராய் ஏற்பாடு செய்தார்.
மும்பையில் உள்ள ஐமேக்ஸ் மிராஜ் திரையரங்கில் சனிக்கிழமை இந்தச் சிறப்புத் திரையிடல் நடைபெற்றது. புற்றுநோயாளிகள் உதவிச் சங்கத்துடன் இணைந்து நடிகர் விவேக் ஓபராய் இதனை நடத்தியதாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதேஷ் திவாரி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷும் நடித்துள்ளனர். விவேக் ஓபராய் இதில் வித்யுத்ஜிஹ்வா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பழம்பெரும் இதிகாசமான 'ராமாயணத்தை'த் தழுவி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் நவம்பர் 5-ஆம் தேதி வெளியானது.
Advertisement
Advertisement
இதுவரை உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ.1,500 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர்களான ஹன்ஸ் சிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ், டி.என்.இ.ஜி மற்றும் யஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.
சன்னி தியோல், அனுபம் கெர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் லாரா தத்தா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.