டேஸ்டி ஸ்பைஸி குடைமிளகாய் பொரியல்
குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பொட்டுக் கடலையைப் பொடித்து வைக்கவும்.
குடைமிளகாய் பொரியல்
தேவையான பொருள்கள்:
குடைமிளகாய் - 3
வெங்காயம் - 1
பொட்டுக்கடலை - 3 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய்
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உளுத்தம் பருப்பு - தேக்கரண்டி
செய்முறை:
குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பொட்டுக் கடலையைப் பொடித்து வைக்கவும்.
Advertisement
Advertisement
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலையை தாளிக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அத்துடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். பின் குடைமிளகாயைச் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர், பொடித்து வைத்த பொட்டுக்கடலைப் பொடியை சேர்த்து நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான குடை மிளகாய் பொரியல் தயார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.