முகப்பு
செய்திகள்

பளபளக்கும் சருமத்திற்கு பப்பாளி! என்ன செய்ய வேண்டும்?

பப்பாளி சுவையான பழம் என்பத்தைத் தாண்டி அதில் நிறைய சத்துகள் உள்ளன. பப்பாளியில் கரோட்டின் சத்து அதிகம் இருக்கிறது.

Updated On : 12 ஜனவரி 2023, 6:01 pm IST
பகிர்:

பப்பாளி சுவையான பழம் என்பத்தைத் தாண்டி அதில் நிறைய சத்துகள் உள்ளன.  பப்பாளியில் கரோட்டின் சத்து அதிகம் இருக்கிறது. தவிர வைட்டமின் ஏ, சி, கால்சியம், பொட்டாசியம் சத்துகள் உள்ளன. 

♦ மாதவிடாய் பிரச்னை, வயிற்றுப் பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். 

♦ சிறுநீர்ப்பையில் ஏற்படும் கல்லை கரைக்கும் தன்மை பப்பாளிக்கு உண்டு. 

Advertisement

Advertisement

♦ எலும்பு வளர்ச்சி, நரம்பு பலப்படுதல், பல் உறுதி ஆகியவற்றுக்கு உதவும். 

♦மேலும் மலச்சிக்கலை நீக்கும், செரிமானத்திற்கும் உடல் எடையைக் குறைக்கவும் வழிவகுக்கும்.

இதையும் படிக்க | ஹெட்ஃபோன் போடாதீங்க..!!

இவ்வாறு உடலுக்குத் தேவையான பல்வேறு நன்மைகளுடன் சரும ஆரோக்கியத்திற்கும் பப்பாளி பெரிதும் பயன்படுகிறது. 

♦ பப்பாளி சாப்பிட்டால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும். இறந்த செல்கள் நீங்கிய பிறகு சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். 

♦ கரும்புள்ளிகளை அகற்றுதல், சருமத்தில் தொற்று, சிவப்பாக இருத்தல் உள்ளிட்டவை சரியாகும். 

♦ சருமம் பளபளப்பாகவும் பொலிவாகவும் இருக்கும். 

♦ தோல் பிரச்னைகளுக்கு காரணமான சருமம் சேதமடைவதைத் தடுக்கும், சேதமடைந்த சருமத்தை சரிசெய்யும். 

♦ பப்பாளியில் லைகோபீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட், சரும சுருக்கங்களைக் குறைத்து முதுமையைத் தடுக்கிறது. 

♦ சருமத்தை மென்மையாக்கவும், நீரேற்றம் செய்யவும் மிகச்சிறந்த பொருள் பப்பாளி. 

♦ பப்பாளி சாப்பிடுவதுடன் சருமப் பிரச்னை உள்ளவர்கள் பப்பாளி சாற்றை முகத்தில் தொடர்ந்து அப்ளை செய்துவர விரைவில் மாற்றம் தெரியும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments