FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

30 நாள்கள் உணவில் சர்க்கரையைத் தவிர்த்தால் நிகழும் அதிசயம் தெரியுமா?

உணவில் சர்க்கரை சேர்க்காமல் இருந்தால் உடலில் நிகழும் மாற்றங்கள் பற்றி...

Updated On : 11 ஜூலை 2026, 12:25 pm IST
கோப்புப் படம் - ANI
பகிர்:

நாம் உண்ணும் உணவு என்பது இப்போதெல்லாம் சத்துமிக்கதாக இருக்கிறதா என்பதைவிட சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கிறதா என்றே பார்க்கிறோம். அதனாலேயே உடலில் பல்வேறு பிரச்னைகள், அதுவும் இளம் வயதிலேயே ஏற்படுகின்றன.

குறிப்பாக உடல் பருமன், நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய் எல்லாம் 30 - 40 வயதுகளிலேயே வந்துவிடுகிறது. உடல் இயக்கம் பெரிதாக இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதாலும் போதிய உடற்பயிற்சி செய்யாததுமே இதற்கு காரணம்.

எனவே, உடலை ஆரோக்கியமாக சரியான எடையில் வைத்துக்கொள்ள உடற்பயிற்சியும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதும் அவசியம்.

Advertisement

Advertisement

அந்தவகையில் உடல்ரீதியான பல்வேறு பிரச்னைகளுக்கு இன்று சர்க்கரை ஒரு மூலக் காரணமாக இருக்கிறது. சர்க்கரை நிறைந்த உணவுகள், செயற்கை இனிப்பூட்டிகள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதனால் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து உடல் பருமன், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

இதனால் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு சர்க்கரை எடுத்துக்கொள்ளும் அளவை குறைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஒரு மாதத்திற்கு அல்லது 30 நாள்களுக்கு உணவில் எந்தவகையிலும் சர்க்கரை எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் உடலில் பல அதிசயங்கள் நிகழும் என்று கூறுகிறார்கள்.

உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்?

முதல் வாரத்தில் உடலானது, டோபமைன் அளவுகளை மறுசீரமைத்துக் கொள்ளும். முதல் வாரம் என்பதால் சர்க்கரை உணவுகளைச் சாப்பிடாததால் தலைவலி, எரிச்சல், தீவிரமான ஏக்க உணர்வுகள் ஏற்படலாம்.

2-ம் வாரத்தில் ரத்த சர்க்கரை அளவு சீராகத் தொடங்கி உடலுக்கு ஆற்றல் கிடைக்கும், புத்துணர்ச்சியை உணர்வீர்கள், நல்ல தூக்கம் கிடைக்கும்.

3 ஆவது வாரத்தில் சர்க்கரை மீதான ஆசை குறையும், மனநிலை சீராகும்.

4 ஆவது வாரத்தில் உடலில் அழற்சி குறைகிறது, ஹார்மோன்கள் சமநிலை அடைகின்றன, தெளிவான சருமத்தையும் உடல் எடை குறைவதையும் காணலாம்.

எதைத் தவிர்க்க வேண்டும்?

சர்க்கரையைத் தவிர்ப்பது என்றால் சர்க்கரை, வெல்லம் போன்ற பொருள்களைத் தவிர்ப்பது மட்டுமின்றி பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளிலும் செயற்கை பானங்களிலும் இனிப்புகள் இருக்கும். அந்த பொருள்களை எல்லாம் தவிர்க்க வேண்டும். பாஸ்ட் புட், ஜங்க் புட் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

எதைச் சாப்பிட வேண்டும்?

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டியது அவசியம். அனைத்து வகையான பழங்கள், காய்கறிகள் சாப்பிடலாம்.

கோழி, மீன், முட்டை ஆகிய புரத உணவுகள் அவசியம் சாப்பிட வேண்டும்.

நட்ஸ், விதைகள், ஆலிவ் எண்ணெய் மற்றும் இளநீர், மூலிகை தேநீர் போன்ற இயற்கை பானங்கள் சாப்பிடலாம்.

பால், சர்க்கரை இல்லாத தேநீர் அருந்த வேண்டும்.

summary

No sugar diet for 30 days: Do you know what happens in our body

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments