FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கருவில் உள்ள குழந்தையின் ஆயுள் காலத்தை தீர்மானிப்பது இதுதான்! ஆய்வில் புதிய தகவல்

கர்ப்ப காலத்தில் தாயின் உடல்நிலைக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வு...

Updated On : 18 ஜூலை 2026, 4:42 pm IST
கோப்புப் படம் - ENS
பகிர்:

குழந்தை கருவில் இருக்கும்போதே அந்த கருப்பையின் சூழல், குழந்தையின் உடல்நலம் மற்றும் ஆயுள் காலத்தை தீர்மானிப்பதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்னைகள் - அந்த குழந்தையின் உடல்நலம் மற்றும் ஆயுள் காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.

நேச்சர் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

Advertisement

Advertisement

கருத்தரிப்பதற்கு முன்னதாக மற்றும் கர்ப்ப காலத்தில் பின்பற்றப்படும் வாழ்க்கை முறை, கருவில் உள்ள குழந்தையின் வாழ்நாள் ஆரோக்கியம், ஆயுள் காலத்தை எவ்வாறு பாதிக்கிறது என ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

கருப்பையில் உள்ள சூழல், குழந்தையின் வாழ்நாள் முழுவதும் உடலின் வளர்ச்சியைப் பாதிக்கக் கூடும் என்று கண்டறிந்துள்ளனர்.

ஒருவரின் ஆரோக்கியத்திற்கு அவரது மரபணுக்கள் முக்கியமானவையாக இருந்தாலும், நீண்டகால ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதில் பிறப்பிற்கு முந்தைய சூழலும் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கலாம் என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

கர்ப்ப காலம் மற்றும் அதற்கு முந்தைய காலம், குழந்தையின் எதிர்கால நல்வாழ்வில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கர்ப்ப காலத்தில் தாயின் ஊட்டச்சத்து, மன அழுத்தம், ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஆகியவை அந்த குழந்தை பிறப்பதற்கு முன்பு உடலின் உறுப்புகள், அமைப்புகள் உருவாவதில் பாதிப்பை ஏற்படுத்தலாம். தாயின் ஆரோக்கியம் மற்றும் குழந்தை கருவில் இருக்கும்போது உள்ள கருப்பையின் சூழல் ஆகியவை அந்த குழந்தையின் வாழ்நாள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுவது இந்த ஆய்வில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சமச்சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி, நல்ல உறக்கம் மற்றும் புகைப்பிடிப்பதைத் தவிர்த்தல் உள்ளிட்ட ஆரோக்கியமான வாழ்க்கை முறைத் தேர்வுகள், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் நோய் அபாயத்தைக் குறைப்பதற்கும் முக்கியமானவையாக இருக்கின்றன.

எனவே, கர்ப்பத்திற்கு முன்னும் கர்ப்ப காலத்திலும் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் கர்ப்பத்திற்கு முந்தைய பராமரிப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

தாயின் உடல்நிலையும் மன நிலையு ம் குழந்தையின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது குறித்து மேலும் ஆய்வுகள் தொடர்ச்சியாக செய்யப்பட வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.

summary

A mother environment during pregnancy plays a significant role in baby health and lifespan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments