FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இது ஒரு மழைக்காலம்! நல்ல தரமான ரெயின்கோட் அவசியம்!! எங்கு கிடைக்கும்? எவ்வளவு விலை?

மழைக்காலத்தில் நல்ல தரமான ரெயின்கோட் அவசியம் என்பது பற்றி..

49 வினாடிகள் முன்பு
ரெயின்கோட் - ani
பகிர்:

வெய்யிலில் குடையில்லையென்றாலும் இருந்து விடலாம், மழையில் குடையும், ரெயின்கோட்டும் இல்லையென்றால் முடியாது என்ற நிலை வந்துவிட்டது. அதற்கேற்ப மழைக்காலமும் தொடங்கிவிட்டது.

குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகளாக இருந்தால் மழைக் காலத்தில் நிச்சயம் ரெயின்கோட் இருந்தே ஆக வேண்டும்.

தற்போது மழைக்கோட்டுகள் மிகவும் குறைந்த எடையுடன் நவீன வடிவமைப்பு மற்றும் நிறங்களில் தண்ணீர் உள்ளே செல்லாத வகைகளில் மிக எளிதாக பாதுகாத்து வைக்கும் வகையில் வருகின்றன.

Advertisement

Advertisement

ஆனால், என்ன ஒருவர் எந்த வகையான ரெயின் கோட் வாங்க வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்துகொள்ள வேண்டும். ரெயின் கோட் என்பது மேல் சட்டை, கால் சட்டை என இரண்டும் தனித்தனியாக இருக்கிறது. ஒரே நீண்ட ரெயின் கோட்டும் கிடைக்கிறது. இவ்விரண்டு வகைகளில் தனித்தனியாக வரும் ரெயின்கோட் ஓரளவுக்கு பலனளிக்கும்.

புடவை அணிவோர், பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களுக்கு வேண்டுமானால் ஒரே நீளமான ரெயின்கோட் சிறந்ததாக இருக்கலாம். ஆனால், தற்போது ரூ.1500 அளவில் சிறந்த ரெயின்கோட் கிடைக்கிறது.

கடைகளில் விற்பனையாகும் ரெயின்கோட்டுகளை நேரில் பார்த்து வாங்குவதும் நல்லது. இல்லையேல், அமேஸான் போன்ற இ-வணிக நிறுவனங்களின் ஆன்லைன் தளங்களில் ஏராளமான வகைகளில் ரெயின்கோட்டுகள் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் ஸீல் நிறுவன ரயின்கோட்டுகள் சட்டை, கால் சட்டை என இரண்டும் தனித்தனியாக விற்பனையில் உள்ளன. பாக்கெட், பேன்ட் அளவை சரி செய்துகொள்ளும் வசதியுடன் இருக்கிறது. பாலியஸ்டர்களில் இருக்கும் ரெயின்கோட்டுகள் என்பதால் நீடித்தும் உழைக்கும்.

அதுபோல போல்டுஃபிட் ரெயின்கோட்டுகள் பெண்களுக்கு என பிரத்யேகமான மாடல்களை அறிமுகம் செய்கின்றன. இது ஆயிரம் ரூபாய்க்குள் கிடைப்பதால் அதிகம் விற்றுத் தீரும் வகையாக உள்ளது. இருபாலருக்கும் பயன்படுத்த ஏற்றது என்பது இதன் தனிச் சிறப்பு.

ரெயின்கோட்டுகளில் அதிகம் பிரபலமான நிறுவனம் டக்பேக். இதன் ப்ரீமியமான ரெயின்கோட்டுகள் ரூ.1500 என்ற அளவில் கிடைக்கின்றன. இதைத் தவிர வைல்ட்கிராஃப்ட் உள்ளிட்ட பல நிறுவன ரெயின்கோட்டுகளும் அதிகம் விற்பனையாகி வருகின்றன.

எனவே, தேவையானவற்றை வாங்கி பத்திரமாக வைத்துக் கொள்வது மழைக்காலங்களில் நிச்சயம் உதவும்.

பத்திரமாக வைத்துக் கொள்ள முடியாது என்பவர்கள், ரூ.100 என மிகக் குறைந்த விலையில் தற்போது விற்பனையாகும் ரெயின்கோட்டுகளை வாங்கிக் கொண்டு ஓராண்டுக்கு பயன்படுத்திவிட்டும் தூக்கி எறியரலாம். அல்லது மறந்து எங்காவிட்டு விட்டுவிட்டாலும் அதிகம் மன உளைச்சல் ஆகாமல் தவிர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments