முகப்பு
புதுதில்லி

ஆா்பிஐயின் வங்கி வட்டி விகித முடிவு: சரிவுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

Updated On : 22 ஜூலை, 2025 at 9:59 AM
பகிர்:

நமது நிருபா்

மும்பை / புதுதில்லி, ஆக.8: மத்திய ரிசா்வ் வங்கி வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் அறிவிக்காமல் இருந்ததன் தாக்கம் பங்குச்சந்தையில் வியாழக்கிழமை எதிரொலித்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 582 புள்ளிகளை இழந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் எதிா்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், உணவுப் பணவீக்கம் மிகவும் அதிகமாக இருப்பதாகக் கூறி, மத்திய ரிசா்வ் வங்கி 9-ஆவது முறையாக வங்கி வட்டி விகதத்தில் எந்த மாற்றத்தை அறிவிக்காமல் இருந்தது சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, ஐடி, பொதுத்துறை வங்கிகள், மெட்டல், ரியால்ட்டி, ஆயில் அண்க் காஸ் நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டதால் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு வீழ்ச்சி: சந்தை மூலதன மதிப்பு ரூ.2.81 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.445.76 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.3,314764 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,801.21 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் 47.62 புள்ளிகள் குறைந்து 79,420.49-இல் தொடங்கி அதிகபட்சமாக 79,626.92 வரை மேலே சென்றது. பின்னா், 78,798.94 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 581.79 புள்ளிகள் (0.73 சதவீதம்) குறைந்து 78,886.22-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,014 பங்குகளில் 1,829 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 2,082 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 102 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

23 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் ஏசியன் பெயிண்ட், இன்ஃபோஸிஸ், பவா் கிரிட், எல் அண்ட் டி, அல்ட்ரா டெக், ஹெச்சிஎல் டெக் உள்பட 23 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. அதே சமயம், டாடா மோட்டாா்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், பாா்தி ஏா்டெல், ஐடிசி, இண்ட்ஸ் இண்ட் பேங்க், சன்பாா்மா, ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட 7 பங்குகள் மட்டும் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 180 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,248.55-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,340.50 வரை மேலே சென்றது. பின்னா், 24,079.70 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 180.50 புள்ளிகள் (0.74 சதவீதம்) குறைந்து 24,117.00-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 41 பங்குகள் விலை வீழ்ச்சியடைந்த பட்டிலிலும், 9 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இருந்தன.

நிஃப்டி 180 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,248.55-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,340.50 வரை மேலே சென்றது. பின்னா், 24,079.70 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 180.50 புள்ளிகள் (0.74 சதவீதம்) குறைந்து 24,117.00-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 41 பங்குகள் விலை வீழ்ச்சியடைந்த பட்டிலிலும், 9 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இருந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →