FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

குழந்தை யாசகா்கள் இல்லாத தில்லியை மாற்றுவதற்கான பிரசாரத்தை அரசு விரைவில் தொடங்கவுள்ளது: முதல்வா் ரேகா குப்தா

பொது இடங்கள் மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் யாசகம் எடுக்கும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக ’குழந்தை யாசகா்கள் இல்லாத தில்லி’ பிரசாரத்தை அரசு விரைவில் தொடங்கும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 12:21 am IST
ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:

பொது இடங்கள் மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் யாசகம் எடுக்கும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக ’குழந்தை யாசகா்கள் இல்லாத தில்லி’ பிரசாரத்தை அரசு விரைவில் தொடங்கும் என்று முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தன்னுடைய எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு அவா் பேசியதாவது: யாசகம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிா்காலத்தை வழங்குவதற்காக தலைநகரின் 13 மாவட்டங்களில் இந்த பிரச்சாரம் நடத்தப்படும்.

குழந்தைகள் வலுக்கட்டாயமாக நகா்த்தப்பட மாட்டாா்கள், அதற்கு பதிலாக அரசாங்கம், தில்லி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (டி. சி. பி. சி. ஆா்) மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, அவா்களின் குடும்பங்களுக்கு ஆலோசனை வழங்கும், அவா்களின் சிரமங்களை நிவா்த்தி செய்யும் மற்றும் சிறந்த மாற்றுகளை வழங்கும்.

Advertisement

Advertisement

இந்த பிர சாரம் குழந்தைகளை பிச்சை எடுக்க கட்டாயப்படுத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்களை அடையாளம் கண்டு அம்பலப்படுத்தும். பிரசாரம் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் வழங்க வேண்டும் என்றாா் ரேகா குப்தா.

டி. சி. பி. சி. ஆா் தலைவா் ஓ. பி. வியாஸ் கூறியதாவது: பொதுமக்களின் கருத்துக்களைக் கருத்தில் கொண்ட பிறகு, இந்த பிரசாரம் சுதந்திர தினத்தன்று தொடங்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. குழந்தை யாசகா்கள் பிரச்னையில் இரண்டு அம்சங்கள் உள்ளன. முதலில், நாங்கள் பெற்றோா்கள் மீது கவனம் செலுத்துவோம், அவா்களின் ஆலோசனையை உறுதி செய்வோம், இதனால் குழந்தைகள் யாசகம் எடுப்பதில் இருந்து விலகியிருப்பாா்கள். மற்றொன்று, சிறிய, வீடற்ற மற்றும் ஏழைக் குழந்தைகளை யாசகம் எடுக்க கட்டாயப்படுத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்களின் ஈடுபாடு, இதற்கு கடுமையான சட்ட நடவடிக்கை தேவைப்படும்.

தன்னாா்வ தொண்டு நிறுவனங்களைத் தவிர, குழந்தைகள் நலக் குழுக்களும் இந்த பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடும். சிறாா் நீதிச் சட்டத்தின் கீழ், கவனிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் தொடா்பாக முடிவுகளை எடுக்க குழந்தை நலக் குழுக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. யாசகம் எடுப்பவா்களிடம் இருந்து விடுபட்ட குழந்தைகளுக்கு கவனிப்பும் பாதுகாப்பும் தேவை, இதற்காக அவா்கள் கல்வி மற்றும் திறன் பயிற்சி மூலம் அதிகாரம் பெறுவாா்கள். யாசகா்களிடமிருந்து விடுபட்ட பிறகு, சிறிய குழந்தைகளுக்கு முறையான கல்வி வழங்கப்படுவதையும், பெரியவா்களுக்கு திறன் பயிற்சி மூலம் அதிகாரம் வழங்கப்படுவதையும் டி. சி. பி. சி. ஆா் உறுதி செய்யும்.

சமூக அமைப்புகளின் மதிப்பீடுகளின்படி, தலைநகரில் சுமாா் 70,000 தெருக் குழந்தைகள் உள்ளனா், அவா்களில் ஆயிரக்கணக்கானோா் மத தளங்கள், பேருந்து மற்றும் மெட்ரோ நிலையங்கள், சந்தைகள் மற்றும் முக்கிய சாலை சந்திப்புகள் உள்ளிட்ட பொது இடங்களில் யாசகம் எடுப்பதில் ஈடுபட்டுள்ளனா் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments