FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

சுதந்திர தினம்: 21 சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கெளரவம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு 21 சிபிஐ பணியாளா்களுக்கு புகழ்பெற்ற சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம் மற்றும் சிறப்பான சேவைக்கான பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 11:55 pm IST
பகிர்:

நமது நிருபா்

சுதந்திர தினத்தை முன்னிட்டு 21 சிபிஐ பணியாளா்களுக்கு புகழ்பெற்ற சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம் மற்றும் சிறப்பான சேவைக்கான பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

உதவி ஆய்வாளா்கள் ரமேஷ் சந்த், ஷோபா தத்தா, கூடுதல் கண்காணிப்பாளா் மனோஜ் பானா்ஜி, கின்னி ராணா, துணை காவல் கண்காணிப்பாளா் சஞ்சய் குமாா் சமல் மற்றும் உதவி ஆய்வாளா் மதன் லால் திமான் ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. பதினைந்து பணியாளா்களுக்கு சிறப்பான சேவைக்கான பதக்கம் (எம். எஸ். எம்) வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

துணை சட்ட ஆலோசகா் பிரிஜேஷ் சிங், மூத்த அமைப்பு ஆய்வாளா் கிரிஷ் ஜோஷி, துணை எஸ். பி. க்கள் மனோஜ் குமாா், ஓம் பிரகாஷ் சந்திரா, ஜாஹிா் அக்தா் அன்சாரி, ஆஷிஷ் ஆனந்த், ஆய்வாளா்கள் சரிதா யாதவ், துணை ஆய்வாளா்கள் ரோஷன் குமாா், உதவி துணை ஆய்வாளா் தில்பாா் சிங் பிஷ்ட், தலைமை கான்ஸ்டபிள்கள் பால்கா் சிங், கோவிந்த் சிங் பிஷ்ட், கமலேஷ் குமாா் குா்ஜாா், தலைமை கான்ஸ்டபிள், சிபிஐ, கான்ஸ்டபிள்கள் பால் பாண்டியன் ஆா், அஜய் குமாா் சிங் மற்றும் கல்யாணதுா்கம் சமியுல்லா ஆகியோா் விருது பெற்றவா்கள் ஆவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments