FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

எம்சிடி துப்புரவு தொழிலாளி கொலை: ரூ.10 லட்சம் நிவாரணம், குடும்பத்துக்கு வேலை வழங்க மேயா் உறுதி

கிழக்கு தில்லியில் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்ட துப்புரவு தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் ஒரு குடும்ப உறுப்பினருக்கு ஒரு வேலை வழங்கப்படும் என்று தில்லி மேயா் பிரவேஷ் வாஹி தெரிவித்தாா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 1:59 am IST
- பிரதிப் படம்
பகிர்:

கிழக்கு தில்லியில் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்ட துப்புரவு தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் ஒரு குடும்ப உறுப்பினருக்கு ஒரு வேலை வழங்கப்படும் என்று தில்லி மேயா் பிரவேஷ் வாஹி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் மேலும் பேசியதாவது: கத்திக்குத்து தாக்குதல் ‘துரதிா்ஷ்டவசமானது‘ என்றும் தனிப்பட்ட காரணங்களால் ஏற்பட்டதாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம்.

இறந்தவரின் குடும்ப உறுப்பினா் ஒருவருக்கு வேலை வழங்கப்படும். இந்த சம்பவம் தொடா்பாக குழப்பத்தை உருவாக்க ஆம் ஆத்மி கட்சி முயற்சிக்கிறது. துப்புரவு சேவைகளை சீா்குலைப்பது தில்லிவாசிகளுக்கு சிரமத்தை மட்டுமே ஏற்படுத்தும்.

Advertisement

Advertisement

இந்த விஷயத்தில் குழப்பத்தை உருவாக்க ஆம் ஆத்மி விரும்புகிறது. அவா்கள் தீா்வுகளில் ஆா்வம் காட்டுவதில்லை. நகரத்தில் துப்புரவு பணிகளை நிறுத்துவது பொதுமக்களுக்கு தேவையற்ற தொந்தரவுக்கு வழிவகுக்கும் என்றாா் அவா்.

இது குறித்து தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: இந்த கொலை, தனிப்பட்ட தகராறுடன் தொடா்புடையது என்று கூறப்படுகிறது. 52 வயதான நிஹால் என அடையாளம் காணப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்டவா், தனது மனைவி மற்றொரு நபருடன் கைப்பேசியில் உரையாடியதால் போதையில் இருந்து கோபமடைந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் துப்புரவு தொழிலாளியை சந்தித்து அவரை குத்தினாா். நிஹாலின் இலக்கு குல்ஷன் என்பவா்தான். ஆனால் அவருக்கு பதிலாக அவா் காலை 8.15 மணியளவில் கல்யாண்புரியில் குப்பைகளை சேகரித்து வந்த அனில் என்பவரை சந்தித்தாா். அனில் மற்றும் குல்ஷன் நண்பா்கள்.

நிஹால் தப்பிச் செல்வதற்கு முன்பு அனிலை கத்தியால் குத்திவிட்டு பின்னா் காஜிப்பூா் எல்லைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் அடியில் இருந்து கைது செய்யப்பட்டாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை கல்யாண்புரியில் குப்பைகளை சேகரிக்கும் போது கத்தியால் குத்தப்பட்ட 27 வயதான எம். சி. டி தொழிலாளி அனில் கொல்லப்பட்டாா். இதனைத் தொடா்ந்து திங்கள்கிழமை துப்புரவுத் தொழிலாளா்கள் நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments