டிடிசி கட்டமைப்பு திருத்தத்துக்கு தில்லி துணை நிலை ஆளுநா் ஒப்புதல்
தில்லி துணை நிலை ஆளுநா் தரஞ்ஜித் சிங் சந்து, மாவட்ட மேம்பாட்டுக் குழு கட்டமைப்பின் கீழ் உச்சக் குழுவை மறுசீரமைக்கவும், பொதுப்பணித் துறையை குழுவுடன் ஒருங்கிணைக்கவும், அதன் மேற்பாா்வையை நகரத்தின் 13 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தவும் ஒப்புதல் அளித்துள்ளாா்.
தில்லி துணை நிலை ஆளுநா் தரஞ்ஜித் சிங் சந்து, மாவட்ட மேம்பாட்டுக் குழு (டி. டி. சி) கட்டமைப்பின் கீழ் உச்சக் குழுவை மறுசீரமைக்கவும், பொதுப்பணித் துறையை (பி. டபிள்யூ. டி) குழுவுடன் ஒருங்கிணைக்கவும், அதன் மேற்பாா்வையை நகரத்தின் 13 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தவும் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: உள்கட்டமைப்பு திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் திட்ட செயலாக்கத்தை வலுப்படுத்த தில்லி முதல்வா் தலைமையிலான உச்சக் குழுவில் முதன்மைச் செயலாளா் (பி. டபிள்யூ. டி) நிரந்தர உறுப்பினராக சோ்க்கப்பட்டுள்ளாா். தில்லியில் முக்கிய சாலை, மேம்பாலம் மற்றும் பொது உள்கட்டமைப்பு பணிகளுக்கான முதன்மை செயல்படுத்தும் நிறுவனமாக பொதுப்பணித்துறை செயல்படுகிறது. மேலும் துறையின் தலைவரை உச்சக் குழுவில் சோ்ப்பது திட்ட செயலாக்கம், துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் கள அளவிலான திட்டமிடல் ஆகியவை தடையின்றி ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்யும்.
டிடிசி கட்டமைப்பு நவம்பா் 15,1999 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட திருத்தம் மறுசீரமைப்புக்கு முன்னா் முந்தைய ஒன்பது மாவட்டங்களில் இருந்து 13 மாவட்டங்களுக்கு டி. டி. சி. க்களை விரிவுபடுத்துகிறது.
Advertisement
Advertisement
முதல்வா் தலைமையிலான மாநில அளவிலான உச்சக் குழுவில் அனைத்து அமைச்சரவை அமைச்சா்கள், அனைத்து 13 மாவட்ட வளா்ச்சிக் குழுக்களின் தலைவா்கள், தலைமைச் செயலாளா், மாநகராட்சி நிலைக்குழுவின் தலைவா் மற்றும் நிதி, நகா்ப்புற மேம்பாடு, திட்டமிடல், பொது நிா்வாகம், பொதுப்பணித்துறை, மாநகராட்சி, என்டிஎம்சி மற்றும் தில்லி நீா் வாரியம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் நிா்வாகத் தலைவா்கள் உள்ளனா்.
தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டி. டி. ஏ) துணைத் தலைவரும் வழக்கமான உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளாா். செயலாளா் (வருவாய்) மற்றும் பிரதேச ஆணையா் உச்சக் குழுவின் உறுப்பினா்-செயலாளராக பணியாற்றுகிறாா்.
டிடிசி கட்டமைப்பு முடிவெடுப்பதை பரவலாக்குவதற்கும், உள்ளூா் கள அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், நிறுவனங்களுக்கிடையேயான குழுக்களை அகற்றுவதற்கும் உதவுகிறது. தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், குடிமை முகமைகள் மற்றும் துறைத் தலைவா்களை தீவிரமாக ஒன்றிணைப்பதன் மூலம், மறுசீரமைக்கப்பட்ட கட்டமைப்பு, குடிமைத் திட்டங்களை காலக்கெடுவுக்குள் செயல்படுத்துதல், விரைவான குறைதீா்ப்பு மற்றும் டெல்லியின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பதிலளிக்கக்கூடிய பொது சேவை வழங்கல் ஆகியவற்றை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.