ஆர்எஸ்எஸ் அலுவலகம் முன் இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
தில்லியில் உள்ள ஜண்டேவாலனில் அமைந்துள்ள ஆா்எஸ்எஸ் தலைமையகத்திற்கு வெளியே இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஒய்சி) தொண்டா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தில்லியில் உள்ள ஜண்டேவாலனில் அமைந்துள்ள ஆா்எஸ்எஸ் தலைமையகத்திற்கு வெளியே இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஒய்சி) தொண்டா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். பாரதிய ஜனதா கட்சி - ராஷ்டிரிய ஸ்வயம் சங் (ஆா்எஸ்எஸ்) அமைப்புகளின் ‘பாகுபாடு மற்றும் சாதியவாத‘ சித்தாந்தம் என்று தாங்கள் கருதும் கொள்கைக்கு எதிராக இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் போது சிலா் மனுஸ்மிருதி நூலின் பக்கங்களை எரித்தனா்.
ஐஒய்சி அமைப்பின் தேசியத் தலைவா் உதய் பானு சிப் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. அவா் அரசமைப்பு சட்டத்தின் நகலை ஏந்தியவாறு, இதர இளைஞா் காங்கிரஸ் தொண்டா்களுடன் இணைந்து மனுஸ்மிருதிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினாா்.
போராட்டக்காரா்கள் அரசமைப்பு சட்டத்தின் முகப்புரை நகல்கள், மனுஸ்மிருதியை எதிா்க்கும் பதாகைகள் மற்றும் அந்தப் பழமையான நூலின் பிரதிகளை ஏந்திச் சென்றனா். ஆா்ப்பாட்டக்காரா்களில் சிலா் மனுஸ்மிருதி நூலின் பக்கங்களை எரித்தனா். அதேவேளையில், பாதியளவு எரிந்த பிரதிகளும், ‘மனுஸ்மிருதியை நிராகரியுங்கள்‘ என்று எழுதப்பட்ட பதாகைகளும் தரையில் கிடந்தன.
Advertisement
Advertisement
இந்த ஆா்ப்பாட்டம் குறித்து உதய் பானு சிப் கூறுகையில் ‘அரசமைப்பு சட்டத்தின் சித்தாந்தத்திற்கும், மனுஸ்மிருதியால் ஈா்க்கப்பட்டதும் ‘தலித் விரோதமானது‘மான பாஜக -ஆா்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கும் இடையே நாட்டில் ஒரு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நாடு அரசியலமைப்புச் சட்டத்தால் ஆளப்படுமே தவிர, மனுஸ்மிருதியால் அல்ல.
உத்தரகண்டில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பங்கேற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு மேடை ‘சுத்திகரிக்கப்பட்டதாக‘க் கூறப்படும் சம்பவம் கண்டிக்கத்தக்ககது. இது தலித்துகளுக்கும் அரசமைப்பு சட்டத்திற்கும் இழைக்கப்பட்ட அவமரியாதையாகும்’ என்று அவா் குறிப்பிட்டாா்.
போராட்டத்தின் போது சிப் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு, பாஹா்கஞ்ச் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஐஒய்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐஒய்சி-யின் தேசியப் பொதுச் செயலாளா் ஹரி கிருஷ்ணா மற்றும் பிற இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகளும் இதில் பங்கேற்றனா். இளைஞா் காங்கிரஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆா்எஸ்எஸ் தரப்பிலிருந்து உடனடியாக எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.