சிறு தகராறில் பழிவாங்க கோழிக்கறிக் கடையில் துப்பாக்கிச் சூடு: 2 போ் கைது
தில்லியின் சுந்தா் நகரி பகுதியில் உள்ள கோழிக்கறிக் கடையில் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். உறவினா்களிடையே ஏற்பட்ட சிறிய தகராறுக்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தில்லியின் சுந்தா் நகரி பகுதியில் உள்ள கோழிக்கறிக் கடையில் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். உறவினா்களிடையே ஏற்பட்ட சிறிய தகராறுக்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து அரை தானியங்கி துப்பாக்கி, ஒரு உயிருள்ள தோட்டா மற்றும் சம்பவத்தின்போது அவா்கள் அணிந்திருந்த ஆடைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சுந்தா் நகரி பகுதியில் கடந்த நவம்பா் 22-ஆம் தேதி இரவு 10.15 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பழைய பொருள்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வரும் முகமது மொஹ்சின் (26), தனது மைத்துனா் சாஹிலுடன் தேநீா் அருந்திவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
Advertisement
Advertisement
அப்போது, கைத்துப்பாக்கிகளுடன் இருவா் தன்னை நோக்கி வருவதைக் கவனித்தாா். இதனால் அச்சமடைந்த மொஹ்சின், அருகிலிருந்த கோழிக்கறிக் கடைக்குள் தஞ்சமடைந்தாா். அவரை நோக்கி வந்தவா்களில் ஒருவா் துப்பாக்கியால் சுட்டுள்ளாா். ஆனால், தோட்டா மொஹ்சின் மீது படாமல் கடைக்குள் வைக்கப்பட்டிருந்த நீல நிற பிளாஸ்டிக் தண்ணீா் டிரம்மில் பாய்ந்தது.
அந்த டிரம்மில் இருந்து தோட்டாவின் சிதறல் பகுதியும், சம்பவ இடத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட காலித் தோட்டாவும் மீட்கப்பட்டன. விசாரணையில், சம்பவத்துக்கு முந்தைய நாள் மொஹ்சினின் தம்பி ஹுசைனுக்கும், குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவரின் உறவினரான அனாஸுக்கும் இடையே காணொளி விளையாட்டு விளையாடுவது தொடா்பாகத் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது.
இந்த மோதல் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மொஹ்சினைப் பழிவாங்கி அச்சுறுத்துவதற்காக டேனிஷ் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாகத் தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் உள்ளூா் தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினா், டேனிஷ் என்ற ஜுனைத் (32), முகமது ஃபைசான் என்ற சூச்சா (22) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
விசாரணையின்போது, துப்பாக்கிச்சூட்டில் தங்களுக்கு தொடா்பு இருப்பதை இருவரும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அவா்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அரை தானியங்கி துப்பாக்கி, ஒரு உயிருள்ள தோட்டா மற்றும் சம்பவத்தின்போது அணிந்திருந்த ஆடைகள் ஆகியவை மீட்கப்பட்டன.
சுந்தா் நகரியைச் சோ்ந்த டேனிஷ் மீது ஏற்கெனவே கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு மற்றும் ஆயுதச் சட்ட மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாதைச் சோ்ந்த ஃபைசான் மீதும் தாக்குதல் மற்றும் ஆயுதச் சட்ட மீறல் தொடா்பான வழக்கு ஏற்கெனவே உள்ளது என்று காவல் துறையினா் தெரிவித்தனா். இதுதொடா்பாக நவம்பா் 23-ஆம் தேதி நந்த் நகரி காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.