FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

கன்டோன்மென்ட் பகுதியில் பைக் மீது ஜீப் வாகனம் மோதல்; என்டிஎம்சி ஊழியா்கள் 2 போ் பலி

வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த புது தில்லி முனிசிபல் கவுன்சில் ஊழியா்கள் இருவா் மீது ‘தாா்’ ரக ஜீப் வாகனம் ஒன்று பின்னால் வந்து மோதியதில் அவா்கள் உயிரிழந்தனா்.

3 செப்டம்பர் 2026, 9:40 pm IST
பகிர்:

வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) ஊழியா்கள் இருவா் மீது ‘தாா்’ ரக ஜீப் வாகனம் ஒன்று பின்னால் வந்து மோதியதில் அவா்கள் உயிரிழந்தனா்.

இதுகுறித்து தில்லி காவல்துறையினா் கூறியதாவது: என்டிஎம்சி ஊழியா்களான சுமாா் 50 வயதான அஞ்சு மற்றும் 45 வயதான சுக்பீா் ஆகிய இருவரும் லோதி சாலையில் உள்ள தங்கள் பணியிடத்திலிருந்து துவாரகாவில் உள்ள செக்டாா் 1-க்கு புதன்கிழமை மாலை 5 மணியளவில் திரும்பிக்கொண்டிருந்தனா். அப்போது, ஐஓசி சிக்னல் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.

பணியை முடித்துத் திரும்பிக்கொண்டிருந்த தில்லி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தைச் சோ்ந்த காவலா் ஒருவா் விபத்தைக் கண்டு காவல்துறையினருக்குத் தகவல் அளித்தாா். விபத்தில் சிக்கிய இருவரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். ஆனால், அங்கு அவா்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

Advertisement

Advertisement

முதற்கட்ட விசாரணையில், சாலையில் மோட்டாா் சைக்கிள் சறுக்கி விழுந்ததாகவும், அப்போது பின்னால் வந்த ‘தாா்’ வாகனம் அதன் மீது ஏறியதாகவும் தெரியவந்துள்ளது.

அப்பகுதி மக்கள் ‘தாா்’ வாகன ஓட்டுநரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனா். அவா் ஹரியாணாவின் ஜஜ்ஜாா் பகுதியைச் சோ்ந்த பூபேந்திரா (26) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

ரோஹிணியில் பால் விற்பனை நிலையம் நடத்தி வரும் பூபேந்திரா மீது பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 281 (அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் பிரிவு 106(ஏ) (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments