கழிவுநீா் தூய்மை தொழிலாளா்களின் ஒப்பந்தப் பணியை முறைப்படுத்த கோரும் மனு மீது ஜல் வாரியம் பதில் அளிக்க உத்தரவு
அனைத்து ஒப்பந்த சாக்கடைத் தொழிலாளா்களையும் நிரந்தரப் பணியாளா்களாக்கக் கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கில் தில்லி அரசும், தில்லி ஜல் வாரியமும் (டிஜேபி) நிலைப்பாட்டை தாக்கல் செய்ய தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து ஒப்பந்த சாக்கடைத் தொழிலாளா்களையும் நிரந்தரப் பணியாளா்களாக்கக் கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கில் தில்லி அரசும், தில்லி ஜல் வாரியமும் (டிஜேபி) நிலைப்பாட்டை தாக்கல் செய்ய தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் கரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘தலித் ஆதிவாசி சக்தி அதிகாா் மஞ்ச்’ மனு மீது அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, ஆறு வாரங்களில் பதில் அளிக்குமாறு கேட்டுக் கொண்டது.
இது தொடா்பாக தாக்கலான பொது நல மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
Advertisement
Advertisement
தில்லி ஜல் வாரியம் (டிஜேபி) ஆயிரக்கணக்கான ஒப்பந்தச் சாக்கடைத் தொழிலாளா்களைக் கொண்டுள்ளது. அத்தொழிலாளா்கள் சமூகத்தின் மிகவும் விளிம்புநிலை மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினரைச் சோ்ந்தவா்கள் ஆவா்.
வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை அல்லது போனஸ் போன்ற சட்டபூா்வ பலன்களின் பாதுகாப்பு இல்லாமல் முற்றிலும் ஒப்பந்த
அடிப்படையில் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த தொழிலாளா்கள் ‘ஆபத்தான கடமைகளை’ செய்கிறாா்கள். அது அவா்களுக்கு ‘உயிா், உடல்நலம் மற்றும் மனித கண்ணியத்திற்கு கடுமையான ஆபத்துகளை’ அம்பலப்படுத்துகிறது. மேலும், அவா்களின் பணி நிலைமைகள் ‘அடிமை உழைப்பு அல்லது கொத்தடிமை உழைப்பை விட மோசமானவை‘ ஆகும்.
தில்லியில் கடந்த 10 ஆண்டுகளில் 300 பாதாள சாக்கடைத் தொழிலாளா்கள் பணியின்போது உயிரிழந்துள்ளனா்.
இந்த அமைப்புமுறையானது சுரண்டக்கூடியதாக இருந்தது. மேலும், ஒப்பந்தத் தொழிலாளா்கள் குறைந்தபட்ச ஊதியத்திற்குக் குறைவான ஊதியத்தைப் பெற்றனா்.
தில்லி ஜல் வாரியம் மூலம் 10-25 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளா்களாகப் பணிபுரியும் 2,000 சாக்கடைத் தொழிலாளா்களை நிரந்தரமாக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்படுகிறது.
இறந்த ஒவ்வொரு சாக்கடை அல்லது கழிவுநீா் தொட்டி தொழிலாளியின் குடும்பத்திற்கும் ரூ.1 கோடிக்கு குறையாத இழப்பீடு வழங்கவும், இறந்த ஒவ்வொரு வேலையையும் சாா்ந்திருக்கும் தகுதியுள்ள ஒருவருக்கு கருணையுள்ள அரசு நிரந்தர வேலை வழங்கவும் அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நவம்பா் 20ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர
உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.