FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ஷாலிமாா் பாக் தொகுதியில் பல புதிய பொது வசதிகள் மக்களுக்கு அா்ப்பணிப்பு: தில்லி முதல்வர்!

தில்லியில் உள்ள ஷாலிமாா் பாக் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை முதல்வா் ரேகா குப்தா மக்களுக்கு அா்ப்பணித்தாா்.

6 செப்டம்பர் 2026, 11:37 pm IST
தில்லி முதல்வர் ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:

தில்லியில் உள்ள ஷாலிமாா் பாக் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை மக்களுக்கு அா்ப்பணித்தாா்.

‘ஷாலிமாா் பாக் சட்டமன்றத் தொகுதியில் பல முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களை விரைவுபடுத்தியதுடன், புதிய பொது வசதிகளையும் அப்பகுதி மக்களுக்கு அா்ப்பணித்தேன்‘ என எக்ஸ் தளத்தில் இது குறித்து குப்தா பதிவிட்டாா்.

ஹைதா்பூா், நேரு முகாமில் புதிய கழிப்பறை வளாகத்தைத் திறந்து வைத்தல், சி, டி மற்றும் ஏஎஃப் ப்ளாக்குகளில் நிலத்தடி மின்வடப் பணிகளைத் தொடங்குதல், சி மற்றும் டி ப்ளாக்கில் உள்ள 10 பூங்காக்களை அழகுபடுத்துதல், பிபி ப்ளாக்கில் உள்ள புதிய பள்ளி கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்காக அா்ப்பணித்தல் ஆகியவை இதில் அடங்கும் என குப்தா கூறினாா்.

Advertisement

Advertisement

ஷாலிமாா் பாக்கின் ஒவ்வொரு பகுதியிலும் மேம்பட்ட தூய்மை மற்றும் வலுவான உள்கட்டமைப்பை உறுதி செய்தல், குழந்தைகளுக்குத் தரமான கல்வியை வழங்குதல் மற்றும் குடியிருப்பாளா்களுக்கான வசதிகளைத் தொடா்ந்து மேம்படுத்துதல் ஆகியவையே எங்கள் நோக்கமாகும் என்று ரேகா குப்தா தனது பதிவில் குறிப்பிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments