FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வளைகுடாப் போரும் சுயசார்பும்

நூலாசிரியர், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் குழும பொது மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பதால் ஒவ்வொரு கட்டுரையிலும் துறைசார்ந்த அனுபவம் வெளிப்படுகிறது. சிறிய நூல் என்றாலும் பெரிய விஷயங்களைத் தெளிவுபடுத்த துணை நிற்கிறது.

24 ஆகஸ்ட் 2026, 6:43 pm IST
பகிர்:

வளைகுடாப் போரும் சுயசார்பும்; பெ.நா. மாறன்; பக். 80; ரூ. 100; தமிழ் உறவு வெளியீடு, சென்னை-600 088. ✆ 99622 43750.

மேற்காசிய போரால் இந்தியா உள்பட உலக நாடுகள் பெரும்பாலானவை எரிபொருள் நெருக்கடியைச் சந்தித்திருக்கின்றன. ஹோர்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பல்களின் போக்குவரத்து மீண்டும் தொடங்கிவிட்டாலும் அவ்வப்போது ஈரானாலோ அல்லது அமெரிக்காவாலோ தடைபட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதனால் எரிபொருள் நெருக்கடி முற்றிலும் நீங்காத நிலையில், எரிபொருள் தேவையை நிறைவு செய்ய இந்தியா எந்தெந்த மாதிரியான தற்சார்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நூலாசிரியர் விளக்கியிருக்கிறார்.

வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்; இதன்மூலம் எல்பிஜியின் தேவை படிப்படியாகக் குறையும். உணவகங்களில் சமையல் எரிவாயு அடுப்புகளுடன் மாற்று ஏற்பாடாக மின்சார அடுப்புகள், சூரிய சக்தி அடுப்புகள் வைத்திருப்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும்; அதற்கான மானியம் அரசு சார்பில் தரப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும்; எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு யோசனைகள் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

தமிழகத்தில் இயற்கை எரிவாயுக் கிணறுகள் தோண்டுவதற்குத் தடையாக இருக்கும் வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்டம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதேவேளையில் அந்தச் சட்டத்தின் ஷரத்துகளின் அடிப்படை நோக்கம் சிதையாமலும் இருக்க வேண்டும் என்ற கருத்தை நூலாசிரியர் முன்வைக்கிறார்.

நூலாசிரியர், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் குழும பொது மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பதால் ஒவ்வொரு கட்டுரையிலும் துறைசார்ந்த அனுபவம் வெளிப்படுகிறது. சிறிய நூல் என்றாலும் பெரிய விஷயங்களைத் தெளிவுபடுத்த துணை நிற்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments