FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஸ்ரீவிலி. ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவம்: பெரியாழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி

விருதுநர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவத்தின் 5}ஆம் நாளான வியாழக்கிழமை பெரியாழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:


விருதுநர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவத்தின் 5}ஆம் நாளான வியாழக்கிழமை பெரியாழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதை முன்னிட்டு, ஆடிப்பூர பந்தலுக்கு பெரியாழ்வார் எழுந்தருளி பெரியபெருமாள், சுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீநிவாஸபெருமாள், திருத்தங்கால் அப்பன், ஆண்டாள் ரெங்கமன்னார் திவ்ய தம்பதிகளுக்கு மங்களாசாசனம் நடைபெற்றது. 
இரவு, ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், சுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீநிவாஸ பெருமாள், திருத்தங்கால் அப்பன் ஆகியோர் பெரிய திருவடி (கருட) வாகனங்களிலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருளினர். தொடர்ந்து, ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. 
ஆடிப்பூர உற்சவப் பந்தலில், ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோயில் ஆஸ்தான வித்வான் நடராஜ் கம்பர் குழுவினரின் சிறப்பு நாகஸ்வரம் நடைபெற்றது. சுவாமிகள் இரவு புறப்பாட்டின்போது சுற்றியுள்ள கிராமங்களின் பாகவத பக்தர்களால் நாம சங்கீர்த்தன பஜனைகள் நடைபெற்றன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments