சதுரகிரியில் நீர்வரத்து அதிகரிப்பு: மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறையை அடுத்துள்ள சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறையை அடுத்துள்ள சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சதுரகிரி மலையில் மாங்கனி ஓடை, சங்கிலிப்பாறை, கருப்பனசாமி கோயில் பாறை பகுதிகளில் நீர்வரத்து கடந்த 2 நாட்களாக அதிகரித்துள்ளது.
எனவே, அமாவாசையான நேற்று சதுரகிரிக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்த நிலையில், சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல முதலில் 500 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
சுவாமி தரிசனம் செய்துவிட்டு 500 பக்தர்களும் திரும்பும் வரை, மற்ற பக்தர்கள் மலைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.