முகப்பு
செய்திகள்

சென்னை காளிகாம்பாள் திருக்கோயிலில் நவ.8 முதல் மஹா கந்த சஷ்டி உற்சவப் பெருவிழா!

சென்னை, தம்பு செட்டித் தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலில்..

Updated On : 6 நவம்பர் 2018, 3:11 pm IST
பகிர்:

சென்னை, தம்பு செட்டித் தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலில் நவம்பர் 8-ம் தேதி முதல் மஹா கந்த சஷ்டி உற்சவப் பெருவிழா தொடங்கவுள்ளது. 

அன்னை ஸ்ரீ காமாட்சி ஸ்ரீ காளிகாம்பாள் எனும் திருநாமம் கொண்டு சர்வ மங்களகாரிணியாகவும், சர்வ துக்கவிமோசினியாகவும், சர்வ விக்னநிவாரிணியாகவும், சர்வவியாதி விநாசினியாகவும், சர்வ சௌபாக்யதாயினியாகவும் ஸ்ரீ சக்ர சாம்ராஜ்ஜினியாய் மேற்கு திசை நோக்கி எழுந்தருளி அன்பர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி மஹாராஜா அவர்கள் வருகை தந்து வழிபாடு செய்ததும், மாகாளி அருள்பெற்ற மகாகவி சுப்ரமணிய பாரதியார் தன் பாமாலையைச் சூட்டி வழிபட்டதும் இத்திருத்தலமே.

ஸ்ரீ வடகதிர்காம முருகப்பெருமானுக்கு ஐப்பசி மாதம் 22-ம் தேதி 08.11.2018 வியாழக்கிழமை முதல் ஐப்பசி மாதம் 28-ம் தேதி 14.11.2018 புதன்கிழமை வரை நடைபெறவிருக்கும் ஸ்ரீ மஹா கந்த சஷ்டிப் பெருவிழாவில் காலை, மாலை வேளைகளில் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனையும் கந்த சஷ்டி உற்சவமும் நடைபெறும். 

Advertisement

Advertisement

மெய்யன்பர்கள் அனைவரும் வருகை தந்து ஸ்ரீ முருகப்பெருமானின் திருவருளை பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments